சனி, 28 பிப்ரவரி, 2026

நோன்பு கற்றுதரும் நிதானம். .

நோன்பு கற்றுதரும் நிதானம். . மாநிலத் தலைமையக ஜும்ஆ - 27.2.26 ஆர்.அப்துல் கரீம் MISc (மாநிலத் தலைவர்,TNTJ

இஸ்ரவேலர்கள் வரலாற்றை அறிவதின் அவசியம்!

இஸ்ரவேலர்கள் வரலாற்றை அறிவதின் அவசியம்! ஏ. சபீர் அலி MISC மாநிலச் செயலாளர், TNTJ தொடர் : 1 26-02-2026

கடமையான தொழுகைக்கு பின்

கடமையான தொழுகைக்கு பின் செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச்செயலாளர்,TNTJ தினம் ஒரு துஆ ரமலான் 2026 - தொடர் - 9

எம்மதமும் சம்மதம் இதுகுறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

எம்மதமும் சம்மதம் இதுகுறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? கே.ரஃபீக் முஹம்மது மாநிலச் செயலாளர்,TNTJ ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 10 - 2026

17:1 வசனத்தின் விளக்கம்

17:1 வசனத்தின் விளக்கம் M.ஹஸ்ஸான் M.I.Sc அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. ரமலான் 2026 - தொடர் - 9

அசத்தலான பிரட் எக் பஃப் ரெசிபி

 

New Project (5)

வழக்கமாக பேக்கரிகளில் கிடைக்கும் எக் பஃப் செய்ய மைதா மாவு பிசைந்து, லேயர் லேயராக மடித்து நீண்ட நேரம் எடுக்கும். ஆனால், அதே சுவையில் மிகக் குறைந்த நேரத்தில், வீட்டில் இருக்கும் பிரட் துண்டுகளை வைத்து இந்த பிரட் எக் பஃப் செய்யலாம். இது மாலை நேரத்தில் குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான பலகாரமாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 4 அல்லது 6
முட்டை – 2
வெங்காயம் – 2 
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
கரம் மசாலா – ½ ஸ்பூன்
மிளகுத் தூள் 
உப்பு 
எண்ணெய்/நெய் 
தண்ணீர் அல்லது பால்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பின், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாசம் வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். வேக வைத்த முட்டைகளை நீளவாக்கில் பாதியாக வெட்டி, அதன் மேல் லேசாக மிளகுத் தூள் மற்றும் உப்பு தூவி வைக்கவும்.

பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி நீக்கிவிடவும். பின் ஒரு சப்பாத்தி கட்டையால் பிரட் துண்டுகளை லேசாக தேய்த்து தட்டையாக்கவும். இது பஃப் மடிப்பதற்கு வசதியாக இருக்கும். தட்டையாக்கிய பிரட்டின் நடுவே தயார் செய்து வைத்துள்ள வெங்காய மசாலாவை ஒரு ஸ்பூன் வைக்கவும். அதன் மேல் பாதியாக வெட்டிய ஒரு முட்டையை வைக்கவும்.

இப்போது பிரட்டின் ஓரங்களில் லேசாக தண்ணீர் அல்லது பால் தடவி, ஒரு முக்கோண வடிவிலோ அல்லது சதுர வடிவிலோ மடித்து ஓரங்களை நன்றாக அழுத்தி விடவும். ஒரு தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, தயார் செய்த பிரட் பஃப்களை வைத்து மிதமான தீயில் சிவக்க விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் வரும் வரை திருப்பிப் போட்டு எடுக்கவும். இப்போது சூடான, சுவையான பிரட் எக் பஃப் தயார். இதனை தக்காளி சாஸுடன் பரிமாறினால் மிகச் சிறப்பாக இருக்கும்.


source https://tamil.indianexpress.com/food/how-to-make-tasty-and-crispy-egg-recipe-in-tamil-11160400

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் - அமெரிக்கா: தலைநகரில் சரமாரி அட்டாக்; வெடிக்கும் போர்

 

ஈரானை சுற்றி வளைத்த இஸ்ரேல் - அமெரிக்கா: தலைநகரில் சரமாரி அட்டாக்; வெடிக்கும் போர்

america

ஈரானிடம் அணுசக்தி இருக்கும் நிலையில் தங்களின் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஈரானை அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலோ அல்லது ஒப்பந்த கையெழுத்துக்கு தாமதம் ஏற்படுகிறது என்றாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார். 

மேலும், ஈரான் அருகே  தனது 2 சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது அமெரிக்கா. டிரம்ப் லேசாக கண் அசைத்தால் போதும் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் திடீரென இன்று  இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரானை குறிவைத்து சரமாரியாக தாக்குதலை தொடங்கியுள்ளன.

ஈரான் தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஈரானில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும்,  பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ஈரான் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தாக்குதலை இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதி செய்துள்ளார். அவர் கூறியதாவது ''ஈரானுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல் முன்கூட்டிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்ரேல் முழுவதும் சிறப்பு மற்றும் நிரந்தர எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் எட்டு நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டு, ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது, “ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் ஈரானிடம் இருந்து வரும் உடனடி அச்சுறுத்தல்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஈரான் ஆட்சியின் அச்சுறுத்தல்களை நீக்கி அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம்” என்றார்.

இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற நடமாட்டங்களைத் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியர்கள் தற்போதைய நிலவரம் குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவும், இந்தியத் தூதரகத்திடமிருந்து வரும் கூடுதல் வழிகாட்டுதல்களுக்காகக் காத்திருக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தூதரகத்தின் அவசர உதவி எண்கள் 

  • +989128109115

  • +989128109109

  • +989128109102

  • +989932179359

28 02 2026 

source https://tamil.indianexpress.com/international/israel-launches-joint-attack-with-us-against-iran-11163495

அனல் பறக்கும் தமிழக அரசியல் களம்

 Stalin MK

Tamil Nadu Assembly Election 2026 DMK Seat Sharing Talks

சென்னை:

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளது. மாநாடுகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் விருப்பமனு விநியோகம் என ஒருபுறம் பணிகள் நடந்தாலும், கூட்டணியை உறுதிப்படுத்தும் 'தொகுதிப் பங்கீடு' விவகாரத்தில் திமுக தற்போது மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ஒரே நாளில் 7 முக்கிய கூட்டணி கட்சிகளை அழைத்து திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முறைப்படி தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தைகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டும் வகையில் வேகம் எடுத்துள்ளன.

காலை நேரப் பேச்சுவார்த்தை: 

இன்று காலை, கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல்கள் ஏற்பட்ட சூழலில், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான குழுவும், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுடன் அடுத்தடுத்த அமர்வுகளில் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மதிய மற்றும் மாலை நேரத் திட்டங்கள்:

இன்று மாலையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கொங்கு இளைஞர் பேரவை, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சிகள் பங்கேற்கின்றன:

ஏற்கனவே முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (MMK) ஆகியவற்றுடன், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும் என இரு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்றைய ஆலோசனையில் தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

நேற்றைய ஆலோசனையில் நிலவிய இழுபறி:

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனையில் சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன:

கம்யூனிஸ்ட்கள் (CPI & CPM): கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், கடந்த தேர்தலைப் போலவே 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் பிடிவாதமாக வலியுறுத்தி வருகின்றனர்.

 கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு, இந்த முறை 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மார்ச் மாதத்திற்குள் தொகுதிப் பங்கீட்டை முழுமையாக நிறைவு செய்துவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் முழுவீச்சில் இறங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். ஒரே நாளில் பல கட்சிகளைச் சந்திக்கும் திமுகவின் இந்த வியூகம், தேர்தல் களத்தில் தங்களது பிடியை வலுப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-assembly-election-2026-dmk-seat-sharing-talks-mk-stalin-11163085

பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க அனுமதி; எந்த வழித்தடம், எத்தனை நிலையங்களில் நிற்கும்? முழு விபரம்

 

metro

சென்னை பூந்தமல்லி – வடபழனி இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த அனுதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் ஒரு பக்கம் வேமாக நடந்து வரும் நிலையில், பணிகள் முழுவதுமாக முடிந்த மெட்ரோ பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனந்த் மதுகர் சவுத்ரி அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 23 முதல் 26 வரை நடைபெற்ற தீவிர ஆய்வு ஆய்வுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்பீட் டிரையல்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், பூந்தமல்லி முதல் போரூர் வரை மணிக்கு 90 கி.மீ வேகத்திலும், போரூர் முதல் வடபழனி வரை மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும் ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டன. ஆய்வு வெற்றிகரமாக முடிந்ததால் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் முதல் வாரத்தில் இந்த ரயில் சேவை தொடங்க வாய்ப்பு உள்ளது.

இந்த வழித்தடத்தில், பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முள்ளைத்தோட்டம், காரையன்சாவடி, குமனஞ்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், தெல்லியாரகரம், போரூர் பைபாஸ், போரூர் ஜங்ஷன், வடபழனி உள்ளிட்ட 11 நிலையங்கள் உள்ளன. இது ஆளில்லா (Driverless) மெட்ரோ ரயிலாக இயங்கும். தொடக்கத்தில் 10 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. போரூர் ஜங்ஷன் முதல் சாலிகிராமம் வரை சில நிலையங்களில் சிவில் வேலைகள் முடியாததால் படிப்படியாக திறக்கப்படும் என்றும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

மெட்ரோ ரயில் சேவையின் 2ம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கிய வழித்தடமாக இருப்பது போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-poonamallie-vadapalani-metro-train-service-permission-update-in-tamil-11163597

வாக்குரிமையை இழந்த மாஞ்சோலை மக்கள்: 1,800-க்கும் மேற்பட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்

 

Manjolai tea estate workers SIR Electoral roll removal Ambasamudram assembly constituency Tamil Nadu elections 2026

Manjolai tea estate workers SIR Electoral roll removal | Ambasamudram assembly constituency

ஐந்து தலைமுறைகளாக இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு, வாழ்வாதாரப் பாதிப்பைத் தொடர்ந்து தற்போது 'வாக்குரிமை' பறிப்பும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் (SIR) விளைவாக, 1,813 தொழிலாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

நூறு ஆண்டு கால வரலாறு: 

1927-ஆம் ஆண்டு மணிமுத்தாறு அணையின் மேல் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்தத் தேயிலைத் தோட்டம் உருவானது. அப்போது ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் நிலமற்ற ஏழைத் தொழிலாளர்கள் (குறிப்பாக ஆதிதிராவிடர் சமூகத்தினர்) இங்கு தேயிலை பயிரிட அழைத்து வரப்பட்டனர்.

கடும் குளிர், கரடுமுரடான நிலப்பரப்பு எனப் பல சவால்களைத் தாண்டி, அங்கு தங்கிய குடும்பங்களுக்காகப் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இடுகாடு என அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டன. மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் குதிரைவெட்டி எனப் பசுமை படர்ந்த பகுதிகளில் இந்த மக்கள் ஒரு தனி உலகத்தையே உருவாக்கி வாழ்ந்து வந்தனர்.

சமவெளிகளில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் மாஞ்சோலையில் கிடையாது என்கிறார் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார். தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், பறையர், நாடார், தேவர், யாதவர் எனப் பல சமூகத்தினர் அங்கு ஒரு குடும்பமாக வாழ்ந்தனர். 1950-களிலேயே இங்கு சாதி மறுப்புத் திருமணங்கள் சாதாரணமாக நடந்தன. ஒரு காலத்தில் அருந்ததியர் சமூகத்தினர் மட்டுமே செய்து வந்த துப்புரவுப் பணிகள், 1960-களுக்குப் பிறகு அனைத்து சமூகத்தினராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது ஒரு நவீன சமூகக் கட்டமைப்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தது.

வாக்குரிமைக்கு வந்த சோதனை: என்ன நடந்தது?

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட குத்தகை 2028-ல் முடிய வேண்டிய நிலையில், நிர்வாகக் காரணங்களால் முன்கூட்டியே பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தொழிலாளர்கள் மலைப்பகுதியை விட்டு சமவெளிக்கு நகரத் தொடங்கினர். இதுவே அவர்களது வாக்காளர் அடையாளத்தைப் பாதிக்கும் காரணியாக மாறியுள்ளது.

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் மொத்தம் 1,906 வாக்காளர்கள் இருந்தனர். இதற்காக மாஞ்சோலை மற்றும் நாலுமுக்கு பகுதிகளில் தலா இரண்டு வாக்குச் சாவடிகளும், ஊத்து பகுதியில் ஒரு வாக்குச் சாவடியும் செயல்பட்டு வந்தன.

ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அங்கு வெறும் 93 வாக்காளர்கள் மட்டுமே இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது, 1,813 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது அந்த மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர்களின் குமுறலும் அதிகாரிகளின் விளக்கமும்

"நாங்கள் இப்போதும் எஸ்டேட்டில் உள்ள எங்கள் வீடுகளில்தான் வசித்து வருகிறோம். பிழைப்பிற்காக மட்டுமே சமவெளிக்குச் சென்று வருகிறோம். ஆனால், எங்களைக் கேட்காமலேயே எங்கள் பெயர்களை நீக்கிவிட்டார்கள்," என மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா மற்றும் ஊத்து பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்தனர். ஏற்கனவே டிசம்பர் மாதம் பெயர் விடுபட்டது குறித்து புதிய பெயர்களைச் சேர்க்க 'படிவம் 6' சமர்ப்பித்தும், இறுதிப் பட்டியலிலும் பெயர் வராதது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், "நேரடி கள ஆய்வின்போது 93 வாக்காளர்கள் மட்டுமே அங்கு வசிப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற 1,813 பேரும் வாழ்வாதாரம் தேடி சமவெளிப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். எனவே, அவர்கள் தற்போது வசிக்கும் புதிய பகுதிகளில் படிவம் 6-ஐச் சமர்ப்பித்து அந்தந்தப் பகுதிகளில் வாக்காளர்களாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்," எனத் தெரிவித்துள்ளனர்.

ஐந்து தலைமுறைகளாக ஒரு குறிப்பிட்ட மண்ணில் வாக்களித்து வந்த மக்கள், இப்போது தங்கள் சொந்த முகவரியை இழந்து அகதிகளாக நிற்பது போன்ற உணர்வில் உள்ளனர். மாஞ்சோலை மக்களின் இந்த வாழ்வாதாரப் போராட்டம், தற்போது அரசியல் உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டமாக உருவெடுத்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/manjolai-tea-estate-workers-sir-electoral-roll-removal-ambasamudram-assembly-constituency-tamil-nadu-elections-2026-11162912

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

உலக அமைதிக்கு உத்தமத்தூதரின் தீர்வுகள்!

உலக அமைதிக்கு உத்தமத்தூதரின் தீர்வுகள்! அண்ணலாரின் ஆட்சிமுறை ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலத் தலைவர்,TNTJ) தொடர் 7 - 24-02-2026

முஸ்லிம்கள் ஏன் ஐந்து நேரம் தொழுகிறார்கள்


முஸ்லிம்கள் ஏன் ஐந்து நேரம் தொழுகிறார்கள் K.A. சைய்யது அலி தணிக்கைக் குழு உறுப்பினர்,TNTJ ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 9 - 2026

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடி போர்' பிரகடனம்: காபூலில் குண்டுமழை: பதறவைக்கும் தற்போதைய நிலவரம்

 

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே 'நேரடி போர்' பிரகடனம்: காபூலில் குண்டுமழை: பதறவைக்கும் தற்போதைய நிலவரம்



source https://tamil.indianexpress.com/international/pakistan-afghanistan-war-live-updates-pakistan-declares-open-war-afghanistan-11160317
27 2 2026

Pakistan Afghanistan War Live Updates Pakistan declares open war Afghanistan

Pakistan Afghanistan War Live Updates | Pakistan declares open war Afghanistan

தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது. "எங்கள் பொறுமைக்கு எல்லை மீறிவிட்டது, இது இனி நேரடிப் போர்" என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே எல்லைப் பகுதியான 'டுராண்ட் லைன்' (Durand Line) பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கான் எல்லைக்குள் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. தஹ்ரீக்-இ-தாலிபான் (TTP) முகாம்களைத் தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது.

இதற்குப் பதிலடியாக, ஆப்கான் படைகள் பாகிஸ்தானின் எல்லைச் சாவடிகள் மீது கடுமையானத் தாக்குதல்களை நடத்தின.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான், இன்று காலை முதல் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது குண்டுமழை பொழியத் தொடங்கியுள்ளது.

நேரடிப் போர்: பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தனது எக்ஸ் (X) தளத்தில், "பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. இனி அமைதி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை, இது எங்களுக்கும் உங்களுக்குமான நேரடிப் போர்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ‘கசாப் லிப் ஹக்’ (Ghazab Lil Haq) என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் ஒரு மாபெரும் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இன்று அதிகாலை முதல் ஆப்கான் தலைநகர் காபூல், கந்தகார் மற்றும் பக்தியா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் சரமாரியாகக் குண்டுகளை வீசி வருகின்றன.

F-16 விமானம் வீழ்த்தப்பட்டதா?

பாகிஸ்தானின் அமெரிக்கத் தயாரிப்பான F-16 போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஆப்கான் படைகள் அறிவித்துள்ளன. அதன் சிதறிய பாகங்கள் அடங்கிய வீடியோவையும் அவை வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் 19 சோதனைச் சாவடிகள் மற்றும் 2 ராணுவத் தளங்களை அழித்துள்ளதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.

உயிரிழப்புகள்: இரு தரப்பும் கூறும் முரண்பட்ட தகவல்கள்

போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து இரு நாடுகளும் வெவ்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன:

பாகிஸ்தான் தரப்பில் 2 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஆப்கான் தரப்பில் 133 பேர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது. மாறாக, 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுள்ளதாக ஆப்கான் தெரிவிக்கிறது. (இந்தத் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை).

சர்வதேச நாடுகளின் கவலை

முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய், "பாகிஸ்தான் தனது தவறான கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆப்கான் மக்கள் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க ஒற்றுமையுடன் போரிடுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், இரு நாடுகளும் போரை நிறுத்தி சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரமலான் மாதத்தின் புனிதத்தைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

டுராண்ட் லைன் என்றால் என்ன?

இது 1893-ல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வரையறுக்கப்பட்ட 2,640 கி.மீ நீளமுள்ள எல்லைக்கோடு. பாகிஸ்தான் இதை சர்வதேச எல்லையாகக் கருதுகிறது, ஆனால் ஆப்கானிஸ்தான் இதனை எப்போதும் அங்கீகரித்ததில்லை. இது பஷ்டூன் பழங்குடியினரைப் பிரிப்பதாக ஆப்கானிஸ்தான் கருதுகிறது. இந்தப் பிணக்கே இன்று ரத்தக் களரியாக மாறியுள்ளது.

எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலைமை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் இந்தப் போரை உற்று நோக்கி வருகின்றன.

அதிரடி தீர்ப்பு: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா விடுதலை- ஆம் ஆத்மிக்கு பெரும் நிம்மதி

 source https://tamil.indianexpress.com/india/arvind-kejriwal-discharged-cbi-case-manish-sisodia-acquitted-excise-policy-delhi-liquor-policy-scam-verdict-11160365


27 2 2026

Arvind Kejriwal discharged CBI case Manish Sisodia acquitted excise policy Delhi liquor policy scam verdict

AAP chief Arvind Kejriwal, Sisodia discharged in CBI’s excise policy case

டெல்லி அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய மதுபானக் கொள்கை வழக்கில், இன்று ஒரு முக்கியமான தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை சிபிஐ (CBI) தொடர்ந்த வழக்கில் இருந்து டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று அதிரடியாக விடுவித்துள்ளது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

வெள்ளிக்கிழமை காலை டெல்லி நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கெஜ்ரிவால், சிசோடியா மற்றும் அவர்களுடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 21 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.

இந்தத் தீர்ப்பைக் கேட்டவுடன் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். "உண்மை ஒருபோதும் தோற்காது என்பதற்கு இன்றைய தீர்ப்பு ஒரு சாட்சி" என அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

வழக்கின் பின்னணி: ஒரு பார்வை

இந்த விவகாரம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. அதன் காலவரிசை இதோ:

ஜூலை 2022-இல் டெல்லி தலைமைச் செயலாளர் நரேஷ் குமார், துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், 2021-22 டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மணீஷ் சிசோடியா கலால் துறை அமைச்சராக இருந்தபோது, தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து அரசுக்கு சுமார் 580 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தினார் என்றும், மதுபான உரிமையாளர்களிடம் இருந்து பெற்ற 'கிம்பளம்' (Kickbacks) பஞ்சாப் மற்றும் கோவா தேர்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் கடைசியாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக இரண்டு அமைப்புகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன:

சிபிஐ (CBI): முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பான வழக்கு. (இதில் தான் இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்).

அமலாக்கத்துறை (ED): பணமோசடி தொடர்பான வழக்கு. (இந்த வழக்கு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது).

எனவே, சிபிஐ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அமலாக்கத்துறையின் பிடி இன்னும் தளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் களத்தில் தாக்கம்

இந்தத் தீர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு மிகப்பெரிய தெம்பைக் கொடுத்துள்ளது. "எங்கள் தலைவர்கள் மீதான பழிவாங்கும் அரசியல் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது" என ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், அமலாக்கத்துறை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்தே கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவின் முழுமையான அரசியல் சுதந்திரம் அமையும்.

உச்சத்தில் இருந்து சரியும் விலை - சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

 கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கத்தின் விலை, சென்னையில் இன்று இரண்டாவது நாளாகக் குறைந்துள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மக்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. திங்கட்கிழமை சவரனுக்கு ₹1,440, செவ்வாய்க்கிழமை ₹240 மற்றும் புதன்கிழமை ₹320 எனத் தொடர்ந்து உயர்ந்து, ஒரு சவரன் ₹1,19,440 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இந்தத் தொடர் உயர்வால் நகை வாங்க நினைப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) சவரனுக்கு ₹80 குறைந்திருந்த நிலையில், இன்றும் (வெள்ளிக்கிழமை) விலை மேலும் சரிந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ₹20 குறைந்து ₹14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ₹160 குறைந்து ₹1,19,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ₹295-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹2,95,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களின் விலை ஒப்பீடு (ஒரு சவரன் - 22 காரட்):

தங்கத்தின் விலையில் கடந்த ஐந்து நாட்களில் ஏற்பட்ட மாற்றங்களை உற்று நோக்கினால், விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதை அறியலாம்:

பிப்ரவரி 26: ₹1,19,360

பிப்ரவரி 25: ₹1,19,440 (வாரத்தின் உச்சம்)

பிப்ரவரி 24: ₹1,19,120

பிப்ரவரி 23: ₹1,18,880

பிப்ரவரி 22: ₹1,17,440

அதேபோல் வெள்ளியின் விலை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி கிராமிற்கு ₹300 என உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது ₹295 என்ற அளவில் நிலைபெற்றுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு போன்ற காரணங்களால் இந்த விலை மாற்றம் ஏற்படுவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விலை சற்று குறைந்திருந்தாலும், இன்னும் ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டி விற்பனையாவதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/business/gold-rate-today-chennai-gold-price-forecast-2026-silver-rate-today-chennai-11159935

எம்.எல்.ஏ பதவி ராஜினாமா; ஸ்டாலினுடன் சந்திப்பு - தி.மு.கவில் ஐக்கியமாகும் ஓ.பி.எஸ்

 27 2 2026

New Project (2)

தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய திருப்பமாக, அ.தி.மு.கவின் முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் முக்கியத் தூணாக விளங்கியவருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்துள்ளார். பல தசாப்தங்களாக தி.மு.கவை மிகக் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்த ஒரு மூத்த தலைவர், தற்போது அதே கட்சியில் இணைய முடிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/former-cm-o-panneerselvam-set-to-join-dmk-today-alternatively-if-you-prefer-something-more-formal-11159975


நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, இன்று காலை சுமார் 9 மணி அளவில் ஓ. பன்னீர்செல்வம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க தலைமையகத்திற்குச் சென்று, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவர் வெறும் கூட்டணியில் மட்டும் இணையவில்லை என்றும், நேரடியாக தி.மு.கவிலேயே இணையப் போவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "வெறும் கூட்டணியில் இணைவதாக இருந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது" என்பதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

இந்த அதிரடி மாற்றத்திற்கான முதல் அறிகுறி கடந்த வாரமே சட்டப்பேரவையில் தென்பட்டது. ஓ.பி.எஸ் அணியின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட எம்.எல்.ஏ பி. அய்யப்பன், சட்டப்பேரவை தளத்திலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டிப் பேசியது அரசியல் நோக்கர்களை உற்றுநோக்க வைத்தது. அப்போதே ஓ.பி.எஸ் தரப்பு தி.மு.கவை நோக்கி நகர்வதாகப் பேச்சுக்கள் எழுந்த நிலையில், இன்று அது உண்மையாகப் போகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக விளங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். இக்கட்டான காலங்களில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களிலும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், தற்போது தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாக தி.மு.கவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் தி.மு.கவை வீழ்த்துவதையே லட்சியமாகக் கொண்டிருந்த ஓ.பி.எஸ், தற்போது அதே உதயசூரியன் சின்னத்தின் கீழ் பயணிக்க முடிவெடுத்திருப்பது, வரும் தேர்தல்களில் அ.தி.மு.கவிற்குப் பெரிய சவாலாக அமையும் எனத் தெரிகிறது. அடுத்த சில மணி நேரங்களில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகள் தமிழக அரசியலின் போக்கையே மாற்றியமைக்கக் கூடும்.

சத்துணவு பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்வு: இரட்டிப்பான ஓய்வுக்கால பலன்கள்- தமிழக அரசின் மெகா அறிவிப்பு

 


anganwadi staff

TN Government Anganwadi Workers Pension Increase

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பதிலுரை வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணிக்கால பலன்களை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு, சட்டப்பேரவையில் இருந்தவர்கள் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பணியாளர்களின் வீடுகளிலும் மகிழ்ச்சியைத் தந்தது.

இதுவரை மிகக் குறைந்த அளவே ஓய்வூதியம் பெற்று வந்த பணியாளர்களுக்கு, இந்த உயர்வு ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது:

அமைப்பாளர்கள் & பணியாளர்கள்: சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ₹2,000 ஓய்வூதியம், இனி ₹3,400 ஆக உயரும்.

குறு அங்கன்வாடி & வனக் களப்பணியாளர்கள்: இவர்களுக்கு இனி மாதந்தோறும் ₹3,200 ஓய்வூதியமாக வழங்கப்படும்.

சமையலர்கள் & தூய்மைப் பணியாளர்கள்: இவர்களது ஓய்வூதியம் ₹3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பணிநிறைவு பலன்கள்: 

பணியாளர்கள் தங்களது நீண்ட கால சேவையை முடித்து ஓய்வுபெறும்போது (Retirement), அவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை (Gratuity) அப்படியே இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

"ஒரு லட்சம் ரூபாய் வாங்கியவர்கள் இனி இரண்டு லட்சம் ரூபாயும், 50 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்த சமையல் உதவியாளர்கள் இனி ஒரு லட்சம் ரூபாயும் பெறுவார்கள்."

நிழலாய் தொடரும் பாதுகாப்பு

ஓய்வூதியம் பெறுபவர் இயற்கை எய்தினால், அவரது குடும்பம் தவிக்கக்கூடாது என்பதற்காக, குடும்ப ஓய்வூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு ₹1,100 ஆகவும், மற்றவர்களுக்கு ₹1,200 ஆகவும் இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கும் நிதியுதவி வழங்க அரசு முன்வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஊழியர்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். "எங்கள் கோரிக்கைகளை அரசு கேட்குமா?" என்ற ஏக்கத்துடன் காத்திருந்த சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு, அலுவலர் குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஒரு பெரும் பரிசாக அமைந்துள்ளது.

"திராவிட மாடல் ஆட்சியில் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகள் எப்போதும் செவிமடுக்கப்படும்" என்ற முதலமைச்சரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, இந்த அறிவிப்பு உடனடியாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-anganwadi-workers-pension-increase-cm-mk-stalin-pension-announcement-11159865

வியாழன், 26 பிப்ரவரி, 2026

89 : 15,16 வசனத்தின் விளக்கம்

89 : 15,16 வசனத்தின் விளக்கம் F.M.அர்ஷத் அலி M.I.Sc அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. ரமலான் 2026 - தொடர் - 8

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வது ஏன்?

முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையில் கலந்து கொள்வது ஏன்? E.J.முஹ்ஸின் (மாநிலச் செயலாளர்,TNTJ) ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 8 - 2026

கடமையான தொழுகைக்கு பின்

கடமையான தொழுகைக்கு பின் செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச்செயலாளர்,TNTJ தினம் ஒரு துஆ ரமலான் 2026 - தொடர் - 7

10 நிமிடத்தில் நாவூறும் பிரட் சில்லி:

10 நிமிடத்தில் நாவூறும் பிரட் சில்லி:

 

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் – 4 முதல் 5 
பெரிய வெங்காயம் – 1 
தக்காளி – 1 
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
குடைமிளகாய் 
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் 
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – ½ டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் அல்லது நெய்
கொத்தமல்லி தழை

செய்முறை:

முதலில் பிரட் துண்டுகளைச் சிறிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு, நறுக்கிய பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, சீரகம் (விருப்பமெனில்) மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து அவை சுருங்கும் வரை வதக்க வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மசாலா கருகாமல் இருக்கச் சிறிதளவு தண்ணீர் தெளிக்கலாம். மசாலா ஒன்று திரண்டு வரும்போது தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 

இது பிரட் சில்லிக்கு நல்ல நிறத்தையும் சுவையையும் தரும். கடைசியாக, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை இந்த மசாலாவில் சேர்த்து, மசாலா அனைத்து துண்டுகளிலும் படுமாறு நன்றாகக் கிளறவும். பிரட் குழைந்து விடாமல் மென்மையாகக் கிளற வேண்டும். இறுதியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், சூடான மற்றும் சுவையான பிரட் சில்லி தயார். இதைச் சூடாகப் பரிமாறும்போது அதன் மொறுமொறுப்பு மாறாமல் மிகச் சுவையாக இருக்கும். நீங்களும் உங்கள் இல்லத்தில் இந்த எளிய முறையை முயற்சி செய்து பாருங்கள்.

1400 படகுகளை மொத்தமாக அனுப்பிய சீனா

 


istockphoto-2192375408-612x612 (1)

தென் சீனக்கடலில் சென்சேஷனல் சம்பவம் ஜனவரி கடைசி வாரம் முழு உலகத்தை அதிர வைத்துள்ளது. ரேடார் திரைகளில் சிறிய புள்ளிகளாகத் தெரிந்த உருவங்கள், சில மணி நேரத்தில் 1,400 கப்பல்களாக மாறியது கண்ணை தின்னவைத்தது. மீன்பிடிப் படகுகள் போல தெரிந்த இக்கப்பல்கள், உண்மையில் 200 மைல் நீளத்திற்கு கடல் வழியாக சுவராக அமைந்து, மற்ற நாடுகளின் படகுகள் அந்த பகுதிக்கு நுழைய முடியாமல் செய்துள்ளன.

முதலில் பாரம்பரிய மீன்பிடிப் படகுகள் போல, ஆரஞ்சு நிற லைஃப் ஜாக்கெட் அணிந்து, வலைகளை சரிபார்க்கும் மீனவர்கள் இருந்தாலும், சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் இதை கவனித்த போது இது சாதாரண மீன்பிடி நடவடிக்கை அல்ல; இது ஒரு திட்டமிட்ட ராணுவ உத்தியாகும் என்ற கருத்துக்கு வந்தனர். இதற்காக சீனா உருவாக்கிய மோதலற்ற படகுக் கூட்டமைப்பு ‘மேரிடைம் மிலிஷியா’ என அழைக்கப்படுகிறது.

சாதாரண மீன்பிடிப் படகுகளைவிட அதிக சக்தி வாய்ந்த இக்கப்பல்கள், கடலில் சுவர் போல நின்று, மற்ற நாட்டுப் படகுகள், குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவை நுழைய முடியாத நிலையை உருவாக்குகின்றன. ஆயுதம் இல்லாமல், வெறும் மனிதர்களை கொண்டு ஒரு கடல்பரப்பை நிர்வகித்து கட்டுப்படுத்தும் சக்தியை சீனா நிரூபித்துள்ளது. இதன் மூலம், எந்தவொரு சண்டையையும்த் தொடங்காமல், மெல்ல மெல்ல அந்தக் கடல் பகுதியில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட முடியும்.

இந்த சம்பவம் பொருளாதார ரீதியிலும் உலகில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தென் சீனக்கடல், இந்தியப் பெருங்கடலுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள முக்கிய கடல்வழித்தடமாகும். உலகளவில் கடல்வழி வர்த்தகத்தின் சுமார் மூன்றில் ஒன்று (3.4 டிரில்லியன் முதல் 5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள்) இதன்மூலம் கடத்தப்படுகிறது. மேலும், ஜப்பான், தென் கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு வளங்களின் பெரும் பகுதி இந்தக் கடல் வழியாக நகர்கிறது.

மேலும், தென் சீனக்கடலில் உலகின் மீன்பிடி உற்பத்தியில் சுமார் 10% வழங்கப்படுகிறது. இதனால், இந்த பகுதி மட்டுமே அல்ல; உலக உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியமான பகுதியாகும். சீனா இப்பகுதியை நிர்வகித்து வைத்திருப்பது, உலக வர்த்தகம், எரிசக்தி வளங்கள், உணவு பாதுகாப்பு மூலமாக உலக அரசியலில் தன்னுடைய ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறப்புப் போர் தந்திரமாகும்.

மீன்பிடிப் படகுகளை களவிழித்துக் கொண்டு, ஆயுதங்களை பயன்படுத்தாமல் ஒரு முழு கடல் பகுதியில் அதிகாரத்தை நிலைநாட்டும் சீனாவின் நடவடிக்கை, உலக நாடுகளுக்கு புதிய சவாலாக இருந்து, அமெரிக்கா-சீனா இடையிலான அரசியல் மற்றும் ராணுவ மோதல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது.

இது காட்டுவது என்னவெனில்: போருக்கு டாங்கிகள் தேவையில்லை; ஆயிரக்கணக்கான மனிதர்களையோ, 'சிவிலியன்' கப்பல்களையோ வைத்து கடலை கட்டுப்படுத்த முடியும் என்பது உலகிற்கு ஒரு புதிய பாடமாக உள்ளது.

source https://tamil.indianexpress.com/lifestyle/china-deploys-1400-maritime-militia-boats-in-south-china-sea-sending-global-political-alert-11157665

புதன், 25 பிப்ரவரி, 2026

முஸ்லிம்களின் கடவுள் யார்?

முஸ்லிம்களின் கடவுள் யார்? ஐயமும் தெளிவும் ரமலான் தொடர் - 7 - 2026

89 : 15,16 வசனத்தின் விளக்கம்

89 : 15,16 வசனத்தின் விளக்கம் F.M.அர்ஷத் அலி M.I.Sc அல்குர்ஆனின் அழகிய விளக்கம்.. ரமலான் 2026 - தொடர் - 7

நபிகளாரின் நேர்மையே! ஆட்சியாளருக்கு தேவை!

நபிகளாரின் நேர்மையே! ஆட்சியாளருக்கு தேவை! அண்ணலாரின் ஆட்சிமுறை ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலத் தலைவர்,TNTJ) தொடர் 6 - 23-02-2026

மார்க்கத்திற்கு எதிரான மத்ஹப்கள்

மார்க்கத்திற்கு எதிரான மத்ஹப்கள் அ.சபீர் அலி MISc (மாநிலச் செயலாளர்,TNTJ) பொதுக்கூட்டம் - 08.02.2026 மண்ணடி - வடசென்னை மாவட்டம்

இறுதி இறைத்தூதரின் சிறப்புகள் என்ன?

இறுதி இறைத்தூதரின் சிறப்புகள் என்ன? ஐயமும் தெளிவும் A.பெரோஸ் கான் (மாநிலச் செயலாளர்,TNTJ) ரமலான் 2026 - தொடர் - 6

அபூபக்கர் முஸ்லியார் ,பிரதமர் மோடி சந்திப்பு - நடந்தது என்ன?

 

அபூபக்கர் முஸ்லியார் ,பிரதமர் மோடி சந்திப்பு - நடந்தது என்ன? காஞ்சி ஏ.இப்ராஹிம் - மாநிலப் பொருளாளர்,TNTJ A.K.அப்துர் ரஹீம் - மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்,TNTJ கலந்துரையாடல் - 24.02.2026

நீதித்துறையில் ஊழல்' 8-ம் வகுப்பு பாடம்: ‘நீதித்துறையை இழிவுபடுத்த யாரையும் அனுமதிக்க மாட்டேன்’ - தலைமை நீதிபதி கண்டனம்

 


cji surya kant

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் இது தொடர்பாகப் பல செய்திகளைப் பெற்றுள்ளதாகக் கூறினார். "நான் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டேன். இது ஒரு திட்டமிட்ட மற்றும் கணிக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது... நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை..." என்று அவர் தெரிவித்தார்.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி) 8-ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற பகுதி இடம்பெற்றுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதன்கிழமை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த நிறுவனத்தை (நீதித்துறை) இழிவுபடுத்த யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.

மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எம்.சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோர் இது குறித்து முறையிட்டபோது, "நீதிமன்றத்தை இழிவுபடுத்த யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இதை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும்" என்று தலைமை நீதிபதி கூறினார்.

இது ஒரு ஒருதலைப்பட்சமான சித்தரிப்பு என்று சிங்வி கூறிய நிலையில், “8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதித்துறை ஊழல் நிறைந்தது என்று கற்பிக்கப்படுவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” என்று கபில் சிபல் தெரிவித்தார்.

இது குறித்துப் பல செய்திகளைப் பெற்றுள்ளதாகக் கூறிய தலைமை நீதிபதி, “நான் இதைத் தானாக முன்வந்து கவனித்துள்ளேன். இது ஒரு திட்டமிட்ட மற்றும் கணிக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது... நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை...” என்றார்.

நீதித்துறை அதிகாரிகளாக விரும்புபவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக் கோர முடியுமா? பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 'இல்லை' என்று கூறுகிறது. 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அந்த அத்தியாயம், நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக, "நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்" மற்றும் "போதிய நீதிபதிகள் இல்லாதது, சிக்கலான சட்ட நடைமுறைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பல காரணங்களால் ஏற்படும் வழக்குகளின் பெரும் தேக்கம்" ஆகியவற்றை பட்டியலிடுகிறது.

அந்தப் பகுதியில், நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்லாமல், வெளியேயும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொறுப்பேற்கும் கடமையைப் பராமரிக்க நீதித்துறையின் உள் பொறிமுறை மற்றும் 'மத்திய பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சி.பி.கிராம்ஸ்-CPGRAMS)' மூலம் புகார்களைப் பெறுவதற்கான நடைமுறை ஆகியவற்றைக் குறிப்பிடும் அந்தப் பகுதி, 2017 மற்றும் 2021-க்கு இடையில் 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாகக் கூறுகிறது.

“குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நீதிபதியை நீக்க முடியும். அத்தகைய தீர்மானம் சரியான விசாரணைக்குப் பிறகே பரிசீலிக்கப்படும், அந்த விசாரணையின் போது நீதிபதி தனது தரப்பு நியாயத்தை முன்வைக்க நியாயமான வாய்ப்பு அளிக்கப்படும்” என்றும் அந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

“இருந்தபோதிலும், மக்கள் நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் ஊழலை அனுபவிக்கிறார்கள். ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு, இது நீதியைப் பெறுவதில் உள்ள சிக்கலை மோசமாக்கக்கூடும். எனவே, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உட்பட, நீதித்துறை அமைப்பில் நம்பிக்கையை வளர்க்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழல் புகார்கள் எழும் இடங்களில் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் மாநில மற்றும் மத்திய மட்டங்களில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பாடப்பகுதி கூறுகிறது.தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி) 8-ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற பகுதி இடம்பெற்றுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்ட ஒரு நாள் கழித்து, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதன்கிழமை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “இந்த நிறுவனத்தை (நீதித்துறை) இழிவுபடுத்த யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் கூறினார்.

மூத்த வழக்கறிஞர்கள் ஏ.எம்.சிங்வி மற்றும் கபில் சிபல் ஆகியோர் இது குறித்து முறையிட்டபோது, "நீதிமன்றத்தை இழிவுபடுத்த யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன். இதை எப்படி கையாள்வது என்பது எனக்குத் தெரியும்" என்று தலைமை நீதிபதி கூறினார்.

இது ஒரு ஒருதலைப்பட்சமான சித்தரிப்பு என்று சிங்வி கூறிய நிலையில், “8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதித்துறை ஊழல் நிறைந்தது என்று கற்பிக்கப்படுவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” என்று கபில் சிபல் தெரிவித்தார்.

இது குறித்துப் பல செய்திகளைப் பெற்றுள்ளதாகக் கூறிய தலைமை நீதிபதி, “நான் இதைத் தானாக முன்வந்து கவனித்துள்ளேன். இது ஒரு திட்டமிட்ட மற்றும் கணிக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது... நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை...” என்றார்.

நீதித்துறை அதிகாரிகளாக விரும்புபவர்கள் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யக் கோர முடியுமா? பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் 'இல்லை' என்று கூறுகிறது. 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தின் அந்த அத்தியாயம், நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக, "நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்" மற்றும் "போதிய நீதிபதிகள் இல்லாதது, சிக்கலான சட்ட நடைமுறைகள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்ற பல காரணங்களால் ஏற்படும் வழக்குகளின் பெரும் தேக்கம்" ஆகியவற்றை பட்டியலிடுகிறது.

அந்தப் பகுதியில், நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்லாமல், வெளியேயும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த நடத்தை விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொறுப்பேற்கும் கடமையைப் பராமரிக்க நீதித்துறையின் உள் பொறிமுறை மற்றும் 'மத்திய பொது குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (சி.பி.கிராம்ஸ்-CPGRAMS)' மூலம் புகார்களைப் பெறுவதற்கான நடைமுறை ஆகியவற்றைக் குறிப்பிடும் அந்தப் பகுதி, 2017 மற்றும் 2021-க்கு இடையில் 1,600-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டதாகக் கூறுகிறது.

“குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்து, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் ஒரு நீதிபதியை நீக்க முடியும். அத்தகைய தீர்மானம் சரியான விசாரணைக்குப் பிறகே பரிசீலிக்கப்படும், அந்த விசாரணையின் போது நீதிபதி தனது தரப்பு நியாயத்தை முன்வைக்க நியாயமான வாய்ப்பு அளிக்கப்படும்” என்றும் அந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

“இருந்தபோதிலும், மக்கள் நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் ஊழலை அனுபவிக்கிறார்கள். ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு, இது நீதியைப் பெறுவதில் உள்ள சிக்கலை மோசமாக்கக்கூடும். எனவே, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது உட்பட, நீதித்துறை அமைப்பில் நம்பிக்கையை வளர்க்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழல் புகார்கள் எழும் இடங்களில் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் மாநில மற்றும் மத்திய மட்டங்களில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பாடப்பகுதி கூறுகிறது.

source https://tamil.indianexpress.com/india/cji-surya-kant-objects-ncert-class-8-textbook-judiciary-corruption-section-11154034

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: டிரம்ப் அதிரடி

 trump

ஈரான் - அமெரிக்கா இடையிலான பிரச்சனை தொடர்ந்து வலுப்பெற்று கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அணுசக்தி தான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதாவது, ஈரானிடம் அணுசக்தி இருக்கிறது. அதனால் ரஷ்யாவின் உதவியால், தன்னிச்சையாக அணு சக்தியை பயன்படுத்தி தனது மின்சார தேவை மற்றும் ஆயுத தேவையை பூர்த்தி செய்ய ஈரான் திட்டமிட்டு வருகிறது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, ஈரான் அணு சக்தியை வைத்துக்கொண்டு அணு குண்டை தயாரிக்கும். இது உலக நாடுகளுக்கு பெரும் ஆபத்து என்று எதிர்த்து வருகிறது. இப்படி நிலமை இருக்கையில் தான் உருவாக்கியிருக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஈரானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஒருவேளை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றாலோ, அல்லது ஒப்பந்த கையெழுத்துக்கு தாமதம் ஏற்படுகிறது என்றாலோ ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் மிரட்டியுள்ளார். 

இது வெறும் வாய் வார்த்தை தான் என்று நினைத்த நிலையில் ஈரான் அருகே  தனது 2 சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது அமெரிக்கா. டிரம்ப் லேசாக கண் அசைத்தால் போதும் ஈரான் மீது தாக்குதலை நடத்த அமெரிக்க போர்க்கப்பல்கள் தயாராக உள்ளது. இதுதான் சர்வதேச அளவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. 

இதனால் ஈரானும் உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறது. இந்த அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் 2 நாடுகளுக்கு இடையே எந்த உடன்பாடும் எட்டவில்லை. தன்னை தற்காத்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரான், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் நாங்களும் தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப், தெஹ்ரானை கடுமையாக சாடினார். போராட்டங்களின் போது 32,000 மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், இந்த பிரச்சனைகளை தூதரக பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதே எனது விருப்பம். ஆனால் ஒரு விஷயம் உறுதி, உலகின் முதல் நிலை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக இருப்பவர்களுக்கு அணு ஆயுதம் கிடைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். 




source https://tamil.indianexpress.com/international/trump-says-will-never-allow-the-worlds-number-one-sponsor-of-terror-to-have-a-nuclear-weapon-11154134

நல்லக்கண்ணு மரணம்

 

nalla

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் நேரிலும் சமூக வலைதளத்தின் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நல்லக்கண்ணு மறைவு குறித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 1-ஆம் தேதி நல்லக்கண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24-ஆம் தேதி சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தது. பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும் அதிதீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர். இன்று (பிப்.25) அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. 

அதி திவீர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால் நல்லக்கண்ணு இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவரது சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவக் குழுக்களுக்கும் தமிழக அரசுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-rajiv-gandhi-hospital-circular-about-nallakannu-death-11154779