ஆண்டுக்கு ஆண்டு பூமிக்குள் இறங்கும் சென்னை: 12 07 2026
மிகவும் பாதிப்படைந்த பகுதிகளான போரூர் மற்றும் மதுரவாயல் இடையே உள்ள 18 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியில்தான் நிலம் உள்வாங்குதல் மிக அதிகமாகப் பதிவாகியுள்ளது. போரூர் ஆண்டிற்கு 15 மி.மீ, மதுரவாயல் ஆண்டிற்கு 13 மி.மீ, கொடுங்கையூர் ஆண்டிற்கு 10 மி.மீ, சென்னை விமான நிலையம் ஆண்டிற்கு 3 மி.மீ முதல் 10 மி.மீ வரை, சேப்பாக்கம் மற்றும் பனையூர் ஆண்டிற்கு 3 மி.மீ முதல் 8 மி.மீ வரையும், பெரம்பூர் மற்றும் பாலவாக்கம் பகுதிகளில் ஆண்டுக்கு 2 மி.மீ முதல் 4 மி.மீ வரை நிலம் சற்று உயர்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
கடல் நீர்மட்டம் ஆண்டிற்கு சுமார் 2.8 மி.மீ உயரும் வேகத்தை விட, சென்னையின் நிலப்பகுதி உள்வாங்கும் வேகம் 5 மடங்கு அதிகமாக உள்ளது. நிலம் உள்வாங்குவதோடு, கடல் நீர்மட்டம் உயர்வு மற்றும் புயல் சமயங்களில் ஏற்படும் கடல் அலைகளின் சீற்றம் போன்றவை இணைந்து சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், அடையாறு, தண்டையார்பேட்டை மற்றும் ஈ.சி.ஆர் (ECR) போன்ற தாழ்வான பகுதிகளைக் கடுமையான வெள்ளப் அபாயத்திற்கு உள்ளாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.நகர் மற்றும் மாதவரம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளிலும் கடல் சீற்றத்தின் போது வெள்ளம் சூழும் அபாயம் உள்ளது.
https://tamil.indianexpress.com/tamilnadu/sinking-chennai-parts-of-chennai-sinking-up-to-15mm-annually-over-140-sq-km-face-inundation-risk-by-2100-study-reveals-12155304





