ஞாயிறு, 15 நவம்பர், 2026

புத்தகக் கொள்முதல் முறைகேடு: அண்ணா நுற்றாண்டு நூலகர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

பெரியார் அறிவுலகம் புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு அம்பலமானதைத் தொடர்ந்து, புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து, 5 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் துணை நூலகர் மற்றும் நூலகர், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் மற்றும் நூலகர் ஆகியோர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொது நூலகங்கள் இயக்குநரக தலைமைக் கணக்கு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், இவர்கள் 5 பேரும் புத்தகக் கொள்முதல் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-updates-akvan-cyclone-chennai-rains-cm-vijay-12810691