வெள்ள நிவாரண வசூல் குறித்த முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக சென்னை மற்றும் கடலூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 21கோடி ரூபாய் அளவிலான உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (15.12.15)வரை நிவாரணப் பொருட்கள் வந்தன. இன்னும் வந்த வண்ணம் உள்ளன.

நிவாரணப் பொருட்கள் அல்லாத ரொக்கப்பணமாக வந்த வரவுகள் இந்த தொகையில் அடங்காது. பணமாக டிஎன்டிஜே தலைமைக்கு வங்கி வாயிலாக அனுப்பிய தொகை மற்றும் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா இன்னும் நமது தவ்ஹீத் ஜமாஅத்தின் வெளிநாட்டு மண்டலங்களில் உள்ள நமது சகோதரர்கள் தாயகத்தில் வாழும் தங்களது உறவினர்கள் நண்பர்கள் வாயிலாக திரட்டித்தந்துள்ளனர். இந்த வகையில் ரொக்கப்பணமாக வந்த வரவு செலவுகளை 1ரூபாய் கூட மிச்சம் இல்லாத வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவிட்டு அதற்கான கணக்கு வழக்குகளை முழுமையாக நாம் வெளியிட உள்ளோம்.
அவ்வாறு அந்த கணக்கு வழக்குகளை வெளியிடுவதற்கு ஏதுவாக வரக்கூடிய 21.12.15 திங்கட்கிழமை இரவு 12மணி என்ற அளவுகோலை வெள்ள நிவாரண வசூலுக்கான கடைசி தேதியாக நாம் அறிவிப்புச் செய்துள்ளோம். இந்த வகைக்காக தங்களது பணத்தை அனுப்புபவர்கள் 21.12.15 திங்கட்கிழமை இரவு 12மணிக்குள் உங்களது நிவாரண உதவித்தொகைகளை அனுப்பிவிட்டால் அன்றுடன் வசூல் இறுதி செய்யப்பட்டு ரொக்கமாக வரவு வைக்கப்பட்ட வசூல் விபரமும், செலவு விபரங்களும் முழுவதுமாக தவ்ஹீத் ஜமாஅத்தின் ஃபேஸ்புக் பக்கத்திலும், உணர்வு வார இதழிலும், நமது tntj.netஇணையதளத்திலும் மக்களது பார்வைக்காக வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்....
இப்படிக்கு,
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்