ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கன அடி நீர் பற்றி



செய்திதாளில் அல்லது டி.வி க்களில் இந்த அணையில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது,அந்த அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது என்று படித்து / பார்த்து இருப்பீர்கள்.
அப்படி என்றால் என்ன ,
இதோ உங்களுக்காக திரு.டி.எஸ்.அருண்குமார், விழுப்புரம் அவர்கள் பதில் அளிக்கிறார்,
பல நபர்களுக்கு இந்த சந்தேகம் இருந்திருக்கும்,ஆனால் அவைகளை யாரிடம் கேட்பது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும்.
சிறிய அளவில் நீர் என்றால் அதனை லிட்டர் கணக்கில் சொல்வோம்,அதே அது பெரிய அளவில் சொல்ல வேண்டும் என்றால் கன அடி ,டி.எம்.சி என்று சொல்லப்படும்.
1 கன அடி என்றால் 28.3 லிட்டர் .
அப்போ தற்போது சாத்தனூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றால்
500*28.3 = 14150 லிட்டர் நீர் திறக்கப்படுகிறது.

thanks: T S Arunkumar Villupuram