உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மதக் குழுவினராக முஸ்லிம்கள் உள்ளதாகவும் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முஸ்லிம்களின் தொகை கிறிஸ்தவர்களின் தொகையை விஞ்சி விடும் எனவும் புதிய ஆய்வொன்று கூறுகிறது.
அமெரிக்க வாஷிங்டன் நகரை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் பக்கச் சார்பற்ற புத்திஜீவிகள் அமைப்பான பியூ ஆராய்ச்சி நிலையத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க சனத்தொகையில் முஸ்லிம்களின் தொகை வருடாந்தம் அதிகரித்து வருவதாக அந்த நிலையம் கூறுகிறது.
2002 ஆம் ஆண்டில் அமெரிக்க சனத்தொகையில் முஸ்லிம்களின் தொகை 5 சதவீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டில் அந்தத் தொகை 10 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதன் பிரகாரம் அமெரிக்காவுக்கு வருடாந்தம் 100,000 பேர் வரை வருவதாக மதிப்பிடப்பட்டுள் ளது.
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட எதிர்பார்த்துள்ள வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என அழைப்பு விடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே மேற்படி ஆய்வின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்கள், தற்போது அமெரிக்காவின் வயதுவந்தவர்கள் சனத்தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவுள்ள அதேசமயம் குடி யேற்றவாசிகளது தொகையில் அவர்கள் 63 சதவீதத்துக்கும் சிறிது குறைவாக மட்டுமே உள்ளதாகவும் மேற்படி நிலையத்தின் அறிக்கை கூறுகிறது.
2050 ஆம் ஆண்டில் அமெரிக்க சனத் தொகையில் 2.1 சதவீதமாக முஸ்லிம்கள் இருப்பார்கள் என அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் வாழ்கின்றனர். இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கலான மேற்படி பிராந்தியத்தில் 62 சதவீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என அந்த ஆய்வு கூறுகிறது.
தற்போது இந்தோனேசியாவே முஸ்லிம்களை அதிகளவில் கொண்ட தனியொரு நாடாக உள்ள நிலையில் 2050 ஆம் ஆண்டில் இந்தியா அந்த இடத்தை கைப்பற்றி விடும் என பியூ ஆராய்ச்சி நிலை யம் தெரிவிக்கிறது.
2050 ஆம் ஆண்டில் இந்தியா வில் முஸ்லிம்களின் சனத்தொகை 300 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகி றது.