செவ்வாய், 24 டிசம்பர், 2019

தமிழகத்தில் 6 கோடியே 1329 வாக்காளர்கள் இருப்பதாக தகவல்...!

தமிழகத்தில் மொத்த 6 கோடிக்கும் அதிகமான வாக்களார்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020ன் வரைவு வாக்காளர் பட்டியல் பற்றிய விபரங்களை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 1329 ஆகும்.
இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 924
தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அங்கு 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநிலத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதி சென்னை துறைமுகம் தொகுதியாகும். அங்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர்.

credit ns7.tv