புதன், 16 டிசம்பர், 2015

ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின் - ஆலிம் -கண்டுபிடித்த ஆங்கில தவறுகள்...

Colachel Azheem's photo.

உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின் ஏழு பதிப்புகளில் தவறாக காணப்பட்ட ஆங்கில வார்த்தைகளை கேரளாவைச் சேர்ந்த மெளலவி . அப்துல் நூர் கண்டுபிடித்துள்ளார்.
மலப்புரம் மாவட்டம் செம்மாடு தாருல் ஹீதா அரபி பல்கலையில் மார்க்க கல்வி கற்று தேர்ந்த பின்னர் ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும் B.Ed, ம் தேர்வு பெற்றவர்.
“Tips On English Pronounciation” என்ற தலைப்பிலான புஸ்தகம் தயாரிப்பிலிருக்கும் மெளலவி . அப்துல் நூர், ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியின் ஆன்லைன் பதிப்பில் பல்வேறு தவறுகள் இருப்பதை கண்டுபிடித்தார். தவறுகளை சுட்டிக்காட்டி Oxford press -க்கு அனுப்பிய E-mail-ஐ பரிசீலித்த நிர்வாகம் தங்களது தவறை உணர்ந்ததோடு அடுத்த எட்டாவது பதிப்பில் சரியான வார்த்தைகளை வெளியிடுவதாக E-mail மூலம் பதில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மெளலவி . அப்துல் நூர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும் பனி புரிவது குறிப்பிடதக்கது.
Colachel Azheem