ஐந்தாண்டு கால ஆட்சியில் ரேஷன் கார்டைக்கூட அச்சடிச்சிக் கொடுக்க முடியாத அரசுகளைத்தான் நாம் தேர்ந்தெடுத்துக்கிட்டு இருக்கோம்...
அரசைத் தேர்ந்தெடுப்பதில் துப்புக்கெட்டவர்களாகவும் இருக்கிறோம்...
அரசைத் தேர்ந்தெடுப்பதில் துப்புக்கெட்டவர்களாகவும் இருக்கிறோம்...
ஸ்மார்ட் கார்ட் கொடுக்க ரொம்ப நாளா முயற்சி செஞ்சுட்டுதான் இருக்காங்க. ஆனா பாருங்க மத்திய அரசு எல்லா மானியத்தையும் பயணாளிகளோட அக்கவுண்ட்ல நேரடியா போட்டுடறோம்னு சொல்லி 16மாவட்டங்கள்ல சோதனை அடிப்படைல கடந்த மூன்று மாதங்களா நடந்துட்டிருக்கு.
மத்திய அரசின் மானியங்களை நேரடியா பயணாகிகளோட வங்கிக்கணக்குல செலுத்த இன்னும் ஒப்புதல் தராதது ஆந்திராவும், தமிழகமும் மட்டுமே.
இருந்தாலும் இதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதால் ”அதாவது உணவு பொருட்களை நாட்டின் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ரயில் மற்றும் சாலை வழியாக எடுத்துச்செல்வது அதை பாதுகாப்பது மற்றும் மறுநகர்வு செய்து ரேஷன் கடைகளுக்கு எடுத்துச்செல்லும் செலவு மற்றும் திட்டத்தினை கண்காணிக்க ஆகும் செலவு என்று ” மிகப்பெரிய மானியம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துவதால் மத்திய அரசுக்கு மிச்சமாகும் என்பதால் இதில் உறுதியாக நிற்கிறார்கள்.
இன்னொரு கணக்கும் உண்டு. ரேஷனுக்கான மானியம் பெரும்பகுதி மத்திய அரசிடமிருந்து வந்தாலும் பேர் என்னவோ அந்தந்த மாநில அரசுகளுக்கே போவதால் தேர்தல் நேரங்களில் இது மத்திய அளவில் பயன் தராத ஒரு திட்டமாகவே பார்க்கப்படுகிறது..
மேலும் உள்நாட்டு பெரு வணிக, பன்னாட்டு பெரு வணிக நிறுவனங்களுக்கும் ரேஷன் கடைகளால் உணவுப்பொருள் விநியோக சந்தையை முழுமையாக கைப்பற்றி லாபம் சம்பாதிக்க முடியாத சூழலில் அரசுக்கு நெருக்கடி அதிகமாகிக்கொண்டே போகிறது.
மத்திய அரசின் உணவுப்பொருள் மானியம் கைவிடப்படுமானால் அதாவது பொருட்களாக அல்லாமல் வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படுமானால் மாநில அரசினால் ரேஷன் கடைகளை நடத்த இயலாத சூழல் உருவாகலாம்..
மத்திய அரசின் உணவுப்பொருள் மானியம் கைவிடப்படுமானால் அதாவது பொருட்களாக அல்லாமல் வங்கிக்கணக்கில் தொகை செலுத்தப்படுமானால் மாநில அரசினால் ரேஷன் கடைகளை நடத்த இயலாத சூழல் உருவாகலாம்..
இப்படியான சூழ்நிலையில் ரேஷன் கடைகளே இருக்குமா என்கிற சந்தேகத்தில் கூட ஸ்மார்ட் கார்டு தேவையா எனவும் மாநில அரசுக்கு தோன்றியிருக்கலாம். அனேகமாக மாநில தேர்தல் முடிந்தப்பின் ரேஷன் கடைகளின் தலைவிதி என்ன என்பது தெரியவருமென்று தோன்றுகிறது..