வியாழன், 3 நவம்பர், 2016

82__83 என்று நினைக்கிறேன்! அமைதியான சூழலில் இருந்த தமிழகம் ஒரு விதமான பதட்ட

82__83 என்று நினைக்கிறேன்!
அமைதியான சூழலில் இருந்த தமிழகம் ஒரு விதமான பதட்ட சூழ் நிலைக்கு
போகிறது !
அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள்
ஒரு நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் க்கு
ஆதரவாக பேசுகிறார்!
ஆர் எஸ் எஸ் சேவை அமைப்பு !
அதை தடை செய்ய தேவை இல்லை!
என்கிறார்!
முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருக்கிறது! இந்துக்களுக்கு இந்து
முன்னனி இருப்பது என்ன தவறு என்கிறார்!
அதுவரை யாரென்றே தெரியாத ராம கோபாலன் என்பவன்! ஊருக்கு ஊர்
மேடை போட்டு முஸ்லிம்களை அசிங்கமாக பேசுகிறான்!
எம் ஜி ஆரின் தாய் பத்திரிக்கை
ஆசிரியராய் இருந்த வலம்புரி ஜான்!!
ராம கோபாலனை பேட்டி எடுத்த
அந்த பத்திரிக்கையில் போடுகிறார்!
அதில் சொல்கிறான் முஸ்லிம்கள்
குர் ஆன் வசனத்தை திருத்த வேண்டும்!
காபிர்களை கொல்லுங்கல் என்று வருகிறது! அதை மாற்றினால்தான்
இங்கே முஸ்லிம்கள் வாழ முடியும்!
இப்படி பேட்டி வந்தது! முதல்வரின்
பத்திரிக்கையிலேயே!
அதன் பின் இஸ்லாமியர்கள் வெகுண்டு எழ
ஆரம்பித்தனர்! பழனி பாபா அவர்கள்
கடுமையாக எம் ஜி ஆரை எதிர்க்க ஆரம்பித்தார்!
சில ஊர்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்! நாகையில் பழைய பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்கு
நின்ற இஸ்லாமிய பென்களை போலீஸார்
சோதனை என்ற பெயரில் துப்பட்டியை
கழட்ட சொன்ன அவலமும் நடந்தது!
நாகூர் மாயவரம் போன்ற ஊர்களிலும்
பென்களை சீண்டும் போக்கு இந்து முன்னனியினரால் தொடர்ந்தது!
முதல்வர் எதையும் கண்டுக்கவில்லை!
அப்போது அமைச்சராய் இருந்தவர் யூசுப்
என்ற ஒருவர் நடிகை ஜி சகுந்தலாவின்
கனவர்!! அவரை நாகூர் பொது கூட்டத்தில்
பழனி பாபா அவர்கள் முனாபிஃக் என்று
பகிரங்கமாக அழைத்தார்! பதிலே இல்லை!
அந்த கட்டத்தில் நிறைய ஊர்களில்
தீவிர எம் ஜி ஆர் வெறிபிடித்து
இருந்தவர்கள் எல்லாம் அ தி மு கவை
விட்டு பிரிந்து தி மு கவில் சேர்ந்தனர் !
ஆர் எஸ் எஸ் நாளொரு மேனி பொழுதொரு வன்னமாய் வளர்ந்தது
தமிழகத்தில் ! சோ குரு மூர்த்தி
சில ஐ ஏ எஸ் அதிகாரிகள் என பகிரங்கமாக ஆர் எஸ் எஸ் ஆதரவு போக்கை கடை பிடித்தனர்!
முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில்
சிலை வைத்து பிரச்சனை பன்னுவது!
வினாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம்
பன்னுவது இப்படி பல சம்பவங்கள்
நடந்தது!
ஏதோ கலைஞர் என்ற ஒருவர்!இன்றைய
இளசுகள் கட்டுமரம் என்று கேலி செய்கிறதே ! அந்த கட்டுமரம் எதிர்ப்பு
காட்டாமல் இருந்திருந்தால்!!
இன்றய தமிழகம் ???????