பிரதமர் மோடி கையால் வழங்கிய விருதினை ஏற்க பிரபல ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர் மறுத்துவிட்டார்.
பிரபல நாளிதழின் நிறுவனரான ராம்நாத் கோயெங்கா பெயரில் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருபவர்களுக்கான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். பத்திரிகை துறைக்கான ராம்நாத் கோயெங்கா விருதுக்காக செய்தியாளர் சந்தீப் பூசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ஆனால், பிரதமர் மோடியின் கருத்துகளும், தனது கருத்துகளும் எப்போதும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாது என்று கூறி விருதினை அவர் கையால் வாங்க மறுத்துவிட்டார் சந்தீப் பூஷன். இதுதொடர்பாக வலைதளம் ஒன்றில் எழுதியுள்ள பூஷன், இலக்கியத்துக்கான ராம்நாத் கோயெங்கா விருதுக்கு எழுத்தாளர் அக்ஷ்யா முகுல் தேர்வு செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
November 03, 2016 - 10:52 AM