என்டிடிவி இந்தியா தொலைக்காட்சி வரும் 9-ம் தேதி ஒருநாள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு அத்தொலைக்காட்சி நிர்வாகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
பதான்கோட் பயங்கரவாத தாக்குதல் நிகழ்வை மற்ற ஊடகங்கள் போல் தாங்களும் ஒளிபரப்பியதாகவும் இந்நிலையில் தங்களை மட்டும் அரசு குறிவைப்பதாகவும் அத்தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் தாங்கள் நடுநிலைமையை கடைபிடித்ததாகவும் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கியுள்ளது. இவ்விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பதான்கோட் விமானப்படைத் தளத்தை பயங்கரவாதிகள் தாக்கிய நிகழ்வை ஒளிபரப்பியபோது யுக்தி ரீதியான முக்கியமான சில தகவல்களை என்டிடிவி இந்தியா வெளிப்படையாக கூறியதாக புகார் எழுந்தது. இதனால் அந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பிற்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் ஒரு நாள் தடை விதித்திருந்தது.
November 04, 2016 - 01:00 PM