வெள்ளி, 4 நவம்பர், 2016

சீன எல்லையில் நவீன விமானத்தை தரையிறக்கிய இந்திய விமானப்படை

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிகப்பெரிய குளோப்மாஸ்டர் சி 17 ராணுவ சரக்கு விமானம் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் தரையிறக்கப்பட்டது.
சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மெச்சுகா தளத்தில் குளோப்மாஸ்டர் சி17 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்துகொண்டிருக்கும் நிலையில், எல்லையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ராணுவ சரக்கு விமானம் தரையிறக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
கடல் மட்டத்திலிருந்து 6,200 அடி உயரத்தில் சி 17 குளோப்மாஸ்டர் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதேபோன்று, சியாச்சின் எல்லைப் பகுதியில் சூப்பர் ஹெர்குலிஸ் சி130ஜெ போர்விமானத்தை இந்தியா 2014ம் ஆண்டு நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.