வியாழன், 3 நவம்பர், 2016

போபால் சிறையுடைப்பு : பா.ஜ.க அரசின் அப்பட்டமான பொய்களை வெளிக் கொணரும் வழக்குரைஞர் பர்வேஸ் ஆலம்.

போபால் சிறையுடைப்பு : பா.ஜ.க அரசின் அப்பட்டமான பொய்களை வெளிக் கொணரும் வழக்குரைஞர் பர்வேஸ் ஆலம்..
நேற்று கொல்லப்பட்ட எட்டு சிமி அமைப்பினர் எனச் சொல்லப்படுபவர்களின் (ஆம் எல்லாமே ‘சொல்லப்படுபவைதான்’ –alleged – தான். எதுவும் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே இன்று அவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்) 
வழக்குரைஞர் பர்வேஸ் ஆலம் The Citizen இணைய இதழின் ஐயங்களுக்குப் பதில் அளிக்கிறார். 
FB_IMG_1478143820001
கொல்லப்பட்ட எட்டு பேர்களின் பெற்றோர்கள் உட்பட அனைவரும் வாய்திறக்க அஞ்சிக் கிடக்கும் நிலையில் வழக்குரைஞர் ஆலம் அதிகாரத்தின் முன் உண்மைகளைப் பேசத் துணிகிறார். 
இப்படித் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்ட ஏராளமான முஸ்லிம்களின் வழக்கை நடத்தியவர் அவர். 
தான் நடத்திய 90 சத வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்கிறார் ஆலம். 
இனி அவரது பதில்கள்:
1.இந்த எட்டு பேர்களும் தங்களுக்குள் எப்படிப் பேசித் திட்டமிட முடிந்தது எனக் கேட்டால் அவர்கள் எல்லோரும் ஒரே கொட்டடியில் (barrack) அடைக்கப்பட்டிருந்ததாகச் சிறை நிர்வாகம் சொல்கிறதே?
ஆலம்: சிறைச்சாலை விதிகளின்படி இத்தகைய குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
அவர்கள் தனித்தனிக் கொட்டடைகளில்தான் அடைக்கப்பட்டிருப்பர். வெள்ளிக்கிழமை தொழுகைகளில் கூட அவர்கள் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. 
(போபால் மத்திய சிறையின் ஒவ்வொரு ‘இன்ச்’சிலும் சிசிடிவி கள் பொருத்தப்பட்டுள்ளன. 
அவர்கள் எட்டு பேரும் ஒரே கொட்டடியில் அடைக்கப்பட்டதற்கு சிசிடிவி ஆதாரம் காட்ட முடியுமா எனவும் ஆலம் கேட்டுள்ளார்.
இதற்கிடையில் ஒரு சிசிடிவி கூட வேலை செய்யவில்லை எனக் கதை பரப்பப் படுகிறது).
FB_IMG_1478143836726
2. இந்தப் பையன்கள் ‘டூத் பிரஷ்ஷை’ தேய்த்து சாவி தயாரித்துப் பூட்டைத் திறந்தனர் என போலீஸ் சொல்கிறதே?
ஆலம் : (சிரிக்கிறார்). ஒரு உயர் பாதுகாப்புச் சிறையில் அவ்வளவு சுலபமா பூட்டைத் திறக்க முடியுமா? அப்ப சாதாரண மாவட்டச் சிறைன்னா கதவைத் தொட்டாலே திறந்துக்குமா?
3. பாத்திரங்களை உடைத்து கத்தி தயாரித்து சிறைக்காவலரின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?
ஆலம்: உயர் பாதுகாப்புச் சிறைகளில் சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்கள் எடுத்துச் செல்லப்படும். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுத் தாக்கிக் கொள்வதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு. 
இங்கே எப்படி ஆயுதம் தயாரிக்கும் அளவிற்கு ‘பாத்திரங்கள்’ அவர்கள் கைவசமே ஒப்படைக்கப்பட்டன?
FB_IMG_1478143831193
4. சிறைச் சுவர்களைத் தாண்டிக் குதிக்க அந்த இளைஞர்கள் போர்வைகளைப் பயன்படுத்தினர் என்கிறார்களே?
ஆலம்: அது 32 அடிச் சுவர். வெறும் போர்வைகளைக் கட்டி அதில் எப்படித் தாண்ட முடியும்? 
அதை உண்மை எனக் கொண்டாலும் அதில் முதலாவதாகத் தாண்டியவன் எப்படி ஏறி இருப்பான்? 
சரி அதையும் உண்மை என்றால் இவ்வளவையும் சிறைக் காவலர்களின் கண்காணிப்பு 24 மணி நேர ‘சென்ட்ரி’ களின் கண்காணிப்பு ஆகியவற்றில் அகப்படாமல் எப்படி அவர்களால் செய்ய முடிந்திருக்கும்?
5. இரண்டாவது சுவரில் இருந்த ஒரு ‘கேட்டை’ அவர்கள் உடைத்துத் திறந்தார்களாமே?
ஆலம்: 32 அடிச் சுவரைத் தாண்ட போர்வைகளைப் பயன்படுத்டியவர்கள் இந்த 5 அடிச் சுவரைத் தாண்ட ஏன் ‘கேட்டை’ உடைத்திருக்க வேண்டும். அப்போது சத்தம் கேட்டிருக்காதா? காவலர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
6. அவர்கள் எட்டு பேரும் சிவிலியன் ஆடைகளில் இருந்தார்களாமே?
ஆலம்: அப்படியானால் யார் அவர்களுக்கு அந்த சிவிலியன் ஆடைகளைக் கொடுத்தது?
7.அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாமே?
ஆலம்: இத்ற்கு ஆதாரம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆயுதபாணியாக இல்லாதவர்களைத்தான் அவர்கள் கொன்றுள்ளனர்.
(சிறையிலிருப்பவர்களை)‘என்கவுன்டர்’ செய்யும் முறை குறித்து போபால் வழக்குர்ரைஞர்கள் சொல்வது: உங்களை விடுதலை செய்யப் போகிறோம் எனச் சொல்லி மாற்று ஆடைகளைக் கொடுத்து வாகனங்களில் அழைத்துச் சென்று கொன்றுவிட்டு அதை என்கவுன்டர் எனச் சொல்வதுதான் வழக்கம்)
நன்றி: தோழர். Marx Anthonisamy