ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கி வரும் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என நான்கு படிகளாக ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வேகமாக விற்றுத் தீரக்கூடிய நுகர்வோர் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும் என ஜி.எஸ்.டி-க்கான வரி வரம்பு சந்திப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி விகிதங்கள் 18% இறுதி செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் உணவு தானியங்களுக்கு வரிவிதிப்பில் முழு விலக்கு அளித்துள்ளது.
சோடா கலந்த குளிர்பானங்கள், பான் மசாலா, சொகுசு கார்கள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி முறையில் அதிகபட்சமாக 28 சதவிகிதத்துக்கும் கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். பணவீக்க மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு 12 மற்றும் 18 சதவிகிதம் என்ற இரட்டை வரிவிகிதங்களை ஜிஎஸ்டி கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொருட்களுக்கு வரி 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் அருண் ஜேட்லி கூறினார்.
பதிவு செய்த நாள் : November 03, 2016 - 05:39 PM