வெள்ளி, 4 நவம்பர், 2016

நீங்கள் அடிக்கடி ஆப்பிள் சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சனைகள் உங்களை தீண்டாது!

ஆப்பிளை எப்படி சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் கிடைக்கும். ஆப்பிள் எல்லா இடங்களிலும் விளைவிக்கப்படுகிறது. புற்று நோயிலிருந்த் பல்வலி வரை பலவித நோய்களிலிருந்து இந்த பழம் காக்கிறது.

ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக அவசியமிருக்காது என ஆங்கிலத்தில் பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனென்றால் ஆப்பிளில் அத்தனை சத்துக்கள் உள்ளது. விட்டமின் ஏ, பி, சி, கால்சியம், நார்சத்து, பொட்டாஸியம், பாஸ்பரஸ் என இன்னும் சத்துக்கள் இருக்கின்றன. தினம் அல்லது வாரம் பல முறை சாப்பிடுவதால் உங்களுக்கு உண்டாகும் நன்மைகளை காண்போம்.

சர்க்கரைவியாதிக்கு ஸ்டே ஆர்டர்:

இந்தியாவில் அதிகம் தாக்கும் நோயான சர்க்கரை வியாதி உங்களை நெருங்காது. ஆப்பிளிலுள்ள பாலிஃபீனால் சர்க்கரை அளவை ரத்தத்தில் கட்டுப்பாடோடு வைத்திருக்கும்.

உடல் எடை அதிகரிக்காது:

அதிலுள்ள அதிக நார்சத்து மற்றும் குறைந்த கலோரி உடல் எடையை கட்டுக்கோப்போடு வைத்திருக்கும். அதிக நேரம் பசியை தாக்குபிடிக்க வைக்கும்.

இதய நோய்கள் நெருங்காது:

ஆப்பிளிலுள்ள ஃபைடோ சத்துக்கள் இதய சம்பந்த பாதிப்புகளை உண்டாக்காமல் தடுக்கும். அதோடு அவை ஆப்பிளில் உள்ள பெக்டின் கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கிறது. இதனால் இதய அடைப்பு தடுக்கப்படும்.

எலும்புகள் பலப்படும் :

எலும்புகளில் தேவைப்படும் அதிக கால்சிய சத்துக்களை ஆப்பிள் கொண்டுள்ளது. இதனால் எலும்புகள் உறுதியோடு இருக்கும். மூட்டு வலி, ஆர்த்ரைடிஸ் பிரச்சனைகள் ஏற்படாது.

கண்கள் கூர்மையாகும்:

கண்பார்வை தெளிவாகும். வயதான பின் வரும் கேடராக்ட், பார்வை மங்குதல் ஆகியவை உண்டாகாது.

புற்று நோயை தடுக்கும்:

ஆப்பிளிலுள்ள ஃபைடோ கெமிக்கல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் செல் சிதைவை தடுக்கிறது. அதோடு புற்று நோய் செல்களை பெருக விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஆஸ்துமா பிரச்சனை:

ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் ஆஸ்துமா கட்டுக்குள் இருக்கும். அதிலுள்ள ஃப்ளேவினாய்டு மூச்சு குழாயில் உள்ள நச்சுக்களையும் கிருமிகளை அழிக்கிறது.