வியாழன், 17 நவம்பர், 2016

மார்வாடி கும்பல்கள் செய்யும் கொள்ளையை அம்பலப்படுத்தியதற்காக கொடுக்கப்படும் நெருக்கடியை சமரசமின்றி எதிர்கொள்வோம்..”.

மார்வாடி கும்பல்கள் செய்யும் கொள்ளையை அம்பலப்படுத்தியதற்காக கொடுக்கப்படும் நெருக்கடியை சமரசமின்றி எதிர்கொள்வோம்..”. -
இந்த கொள்ளையை அம்பலப்படுத்தும் காணொளியும், எங்களது விளக்க அறிக்கையும். - மே 17 இயக்கம்.
ஏழை எளிய மக்களிடம், செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்கிக் கொண்டு 400 , 700 ரூ சேட்டு-மார்வாடிகள் தருவதாகவும், அதே போல, தங்கத்தினை விலை உயர்த்தி சவுகார்பேட்டை போன்ற இடங்களில் விற்பதையும் ஊடகங்களில் மே17 இயக்க தோழர்கள் அம்பலத்தினோம்.
இதைத் தொடர்ந்து, மார்வாடி கும்பல்கள் ’தாங்கள் அவ்வாறு செய்யவில்லை’ என்று பிரச்சாரமும், ஊடகத்திற்கு அழுத்தங்களும் கொடுத்து வருகிறது.
இது குறித்து பேசிய நண்பர்களுக்கும் இதே போன்றதொரு நெருக்கடியை தொழில்முறையிலும்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
நியூஸ்7 தொலைக்காட்சியில் மே17 இயக்கம் இந்த சுரண்டலையும், கொள்ளையையும் அம்பலப்படுத்தியதற்கு அடுத்த நாள் சவுகார்பேட்டையிலும் இதர இடங்களிலும் வருமானவரித் துறை விசாரணை நடத்தியது. இதில் சிக்கியவர்கள், நிறுவனங்கள், கைப்பற்றிய பணம் ஆகிய எந்த விவரங்களும் மூன்று நாட்களுக்கும் மேலாக வெளியிடப்படவில்லை. பிற இடங்களில் இம்மாதிரி வருமானவரித் துறை சென்றால் வெளியிடப்படும் அடிப்படை விவரங்கள் கூட வெளியிடப்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் இந்த கொள்ளை இன்றளவும் தொடர்வதாக பல்வேறு நண்பர்கள் இது குறித்து நம்மிடம் சொல்லி வருகிறார்கள். இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகவே நடந்தும் வருகிறது.
ஒரு நெருக்கடியான சூழலை பயன்படுத்திக் கொண்டு ஏழை எளிய மக்களை சுரண்டும் கும்பலை அம்பலப்படுத்துவது நமது அடிப்படை அரசியல் கடமையே. அதிலும் கருப்பு பணத்தினை பெருமளவில் பதுக்குவதும், ஹவாலா போன்ற தொழிலில் கைதேர்ந்த பணிகளை செய்யக் கூடிய நபர்கள் இயங்கி வருகிற சூழலை அம்பலப்படுத்தாமல், அரசின் போலியான ‘கருப்புப் பண’ எதிர்ப்பினை அம்பலப்படுத்த இயலாது.
இது குறித்து தோழர்கள் மீது நடவெடிக்கை எடுப்பதாக மார்வாரி கும்பல் மிரட்டுவதற்கு மே 17 இயக்கம் அஞ்சப்போவதில்லை, பின் வாங்கப் போவதும் இல்லை. நம்மைச் சுற்றி நிகழும் இந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்த அனைவரும் முன்வாருங்கள் எனும் கோரிக்கையை முன் வைக்கிறோம். தமிழகத்தினை சுரண்டும் ஒரு ஒட்டுண்ணீ கும்பல், ஏழைகளின் நெருக்கடியை பயன்படுத்தி சுரண்டிக் கொழுப்பதை அம்பலப்படுத்தும் பணிக்கு துணையாக வாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறோம்.
தமிழகத்தின் பொருளாதாரத்தினை உறிஞ்சி வளர்ந்து நிற்பவர்கள், எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்பதாக செய்யும் இந்த அக்கிரமத்தினை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கவும் மே 17 இயக்கம் தயாராக நிற்கிறது.
எந்தக் குற்றச்சாட்டையும் ஆதாரமின்றி நாங்கள் பேசவில்லை. இந்த கொள்ளைக்குறிய ஆதாரம் பின்னிணைப்பாக இருக்கிறது.
( வீடியோ இணைப்பு: மார்வாடி கும்பல்கள் செய்யும் கொள்ளையை அம்பலப்படுத்தும் காணொளி ). செய்தியை ஆதாரத்துடன் வெளியிட்ட செய்தி தளம் http://tamilsnow.com/?p=98386 (காணொளி நவம்பர் 11இலேயே வெளியிடப்பட்டிருக்கிறது)
தமிழ்த்தேசியம் என்பது வெறும் வெட்டிப் பேச்சல்ல, அது ஏழை எளிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிரான குரல். அந்த குரலை மே17 இயக்கம் சமரசமின்றி உரத்துப் பேசும்.
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்

Related Posts: