மெக்கா, மார்ச். 20-
எகிப்தில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரங்களான மெக்கா மற்றம் மெதீனாவுக்கும் புனித யாத்திரையாக யாத்ரீகர்கள் பஸ்சில் வந்தனர். சவுதி அரேபியா வந்த அவர்கள் மெக்காவுக்கும், மெதீனாவுக்கும் இடையே பஸ் சென்று கொண்டிருந்தது.
ரோட்டில் ஒரு வளைவில் திரும்பிய போது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 9 பேர் பலியாகினர். சில நாட்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தின் மேற்கு கரையை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு புனித யாத்திரை வந்த போது ஜோர்டானில் பஸ் விபத்துக்குள்ளானது. அதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்துக்கது.