வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் நடந்த பரபரப்பு தேதி வாரியாக..


கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலில் நடந்த பரபரப்பு தேதி வாரியாக..


தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, மக்களின் அதிர்ப்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற நாளிலிருந்து தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவிற்கு பிறகு இந்த 10 நாட்கள் நிமிடங்கள் தவறாமல் அடுத்தடுத்து அதிரடியாக நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு.

பிப் 5ம் தேதி

►தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவை ஏற்று மாற்று ஏற்பாடு செய்யும்வரை முதல்வர் பதவியில் இருக்க வேண்டுமென ஆளுநர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வலியுறுத்தினார். அதன் பின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிப் 6ம் தேதி

►அப்போல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

பிப் 7ம் தேதி 

►ஓ.பன்னீர்செல்வம் இரவு 9 மணியளவில் ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். 
►தன்னை மிரட்டியதால் தான் ராஜினாமா செய்ததாக அ.தி.மு.க. தலைமை மீது கடும் விமர்சனத்தை முன்வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.
►மக்கள் விரும்பினால் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று அதிரடியாக அறிவித்தார்.

பிப் 8ம் தேதி 

►ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
►சசிகலா ஆலோசனையின் பேரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 சொகுசு பஸ்களில் கூவத்தூர் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
►ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்கு அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம்  
►சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சண்முகநாதன் எம்.எல்.ஏ., சொகுசு பஸ்சில் இருந்து இறங்கி, ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். 
►அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், எம்.எல்.ஏ.க்கள் ஆறுகுட்டி, மாணிக்கம், மனோரஞ்சிதம், மனோகரன் ஆகியோர்        ஆதரவு அளித்தனர். 
►அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு. 
  * பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவேன் என்று செய்தியாளர் சந்திப்பில் பன்னீர்செல்வம் அறிவிப்பு.

பிப் 9ம் தேதி

►தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை வந்தவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தனித்தனியாக சந்தித்தனர்.
►அ.தி.மு.க. எம்.பி.க்கள் முதலமைச்சராக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கோரி பாராளுமன்றத்தில் கடும் அமளி.
►ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை.
►கூவத்தூரில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விடுவிக்கக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.
►ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
►புதுச்சேரி நெல்லித்தோப்பு நிர்வாகிகள் அனைவரும் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்தனர்.

பிப் 10ம் தேதி

►சட்டசபையை உடனடியாக கூட்ட வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார்.
 ►நடிகர் கமல்ஹாசன் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமே தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
 ►தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி.யுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.                                                    ►எங்களை யாரும் கடத்தவில்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் பேட்டியளித்தனர்.
 ►ஓ.பன்னீர்செவத்தின் அணியில் இணைந்த மதுசூதனன் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி விட்டதாக அறிவித்தார்.

பிப் 11ம் தேதி

 ►ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் பலம் 6 ஆகவும், எம்.பி.க்கள் 4 ஆகவும் ஆதரவு உயர்ந்தது.
 ►ஆட்சி அமைக்க உடனே வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநருக்கு சசிகலா கடிதம்.
 ►ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அமைச்சர் க.பாண்டியராஜன் தாவினார். சுதந்திரமாக செயல்பட ஓ.பன்னீர்செல்வத்தின் அணிக்கு வாருங்கள் என்று அழைப்பும் விடுத்தார்.
 ►எந்த அணியிலும் தான் இல்லை என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நட்ராஜ் அறிவிப்பு.
 ►எம்.எல்.ஏ. கடத்தல் புகாரை தொடர்ந்து சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களிடம் தாசில்தார் 5 மணிநேரம் விசாரணை.

பிப் 12ம் தேதி

►போயஸ் தோட்டத்தில் இருந்து கூவத்தூருக்கு சசிகலா எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச முதல் முறையாக புறப்பட்டு சென்றார். 
►அ.தி.மு.க.வுக்கு ஒரு பிரச்சனை வந்தால் உயிரை கொடுத்து காப்பேன் என்று சசிகலா பேட்டி.
►தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வை காணவில்லை என்று ஆங்காங்கே பொதுமக்கள் போலீசில்
►மிஸ்டுகால் மூலம் 35 லட்சம் பேர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு.

பிப் 13ம் தேதி

►ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு.
► சரவணன் எம்.எல்.ஏ. கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாக ஓபிஎஸ் வீட்டில் பேட்டி.

பிப் 14ம் தேதி
 
► பன்னீர்செல்வத்துக்கு செம்மலை, சின்ராஜ் எம்.எல்.ஏ. ஆதரவளித்தனர்
►சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில், ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் ஈடுபட தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
►ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்.
►அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை.
►அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.
►அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவளித்தவர்களை நீக்கி சசிகலா அதிரடி.
►டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பு. அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம்.
►தீர்ப்பு வந்து விட்டதால் நிலையான ஆட்சியை அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்தினார்.
► போயஸ் தோட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு முழுவதும் நீக்கம்.
► கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
► ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்தார்.
► ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இரவு ஜெயலலிதா நினைவிடத்தில் சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வின் இருகரங்களாக செயல்படுவோம் என்றும் பேட்டி.
►சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைவதற்காக கூவத்தூரிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்றார்.

பிப் 15ம் தேதி

► பெங்களூருவுக்கு புறப்பட்ட சசிகலா மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை கையால் அடித்து சபதம் எடுத்தார்.
► ஆளுநருடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திப்பு.
► உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டசபை தேர்தல் வரும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

பிப் 16ம் தேதி

 ►எடப்பாடி பழனிசாமி ஆளுநருடன் மீண்டும் சந்திப்பு.
 ►ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க அறிவுறுத்தல்.
 ►மக்கள் விரும்பும் ஆட்சி மீண்டும் அமைக்க எங்கள் தர்மயுத்தம் தொடரும் என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
 ►அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஆளுநரின் நடவடிக்கைக்கு வரவேற்பு.
 ►பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக சட்டப்பேரவை 18-02-2017 சனிக்கிழமை கூடும் என அறிவிப்பு
http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/17/2/2017/political-furore-last-10-days-date

Related Posts: