சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பான 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் கர்நாடக நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர். குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவின்படி சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்ததும் நடைமுறைக்கு வந்தது.
பதிவு செய்த நாள் : February 14, 2017 - 10:50 AM