புதன், 1 பிப்ரவரி, 2017

அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள் ஒருவருடமிருந்து ரூ.2,000 வரை மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படுவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை வெளிப்படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் ஒருவருடமிருந்து ரூ.2,000 வரை மட்டுமே ரொக்கமாக பெற அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதுவரை அரசியல் கட்சிகள் ஒருவரிடமிருந்து ரூ.20,000 வரை ரொக்கமாக பெற முடியும்.
அரசியல் கட்சிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ள அவர், அரசியல் கட்சிகள், செக் மூலமாகவோ, மின்னணு முறை மூலமாகவோ நிதி பெற கட்டுபாடில்லை எனவும் தெரிவித்துள்ளார்.