Iran US Israel War LIIVE News Updates: கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதேபோல், அந்நாட்டின் முக்கிய தலைவர்களும், தளபதிகளும் மரணமடைந்து உள்ளனர். மேலும் 2,875 ஆண்கள் மற்றும் ஏறத்தாழ 500 பெண்கள் உட்பட 3,375 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தியது. கச்சா எண்ணெய், எரிவாயு கடந்து முக்கிய கடல் வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடியது. இதனால், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், இந்தியா உட்பட பல நாடுகளில் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
பாகிஸ்தானில் நடந்து வந்த அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு இன்னும் எட்டப்படவில்லை. அடுத்த 2 நாள்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதேபோல், நேற்று புதன்கிழமை பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஈரானுடன் டிரம்ப் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. அவர் பெரிய பேரத்தை ஏற்படுத்த விரும்புகிறார். நீங்க அணு ஆயுதம் வைத்திருக்க மாட்டோம் என்று உறுதியளித்தால், நாங்க ஈரானை செழிக்கச் செய்வோம். நாங்க அதை பொருளாதார ரீதியாக வளமாக்குவோம், மேலும் என் வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் ஈரானிய மக்களை உலகப்பொருளாதாரத்திற்குள் அழைப்போம் என்று கூறியிருக்கிறார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படை முற்றுகையிட்டுள்ளது. இதனால், கப்பல் போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்து உள்ளது. ஆனாலும் அவர்களின் எச்சரிக்கையையும் மீறி, சீனாவிற்குச் சொந்தமானதும், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்டதுமான ‘ரிச் ஸ்டாரி’ என்ற எண்ணெய் கப்பல், நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாகப் பயணித்தது. 2,50,000 பீப்பாய்கள் மெத்தனாலைச் சுமந்து சென்றது.
source https://tamil.indianexpress.com/international/iran-war-live-updates-us-military-hormuz-strait-block-iranian-port-traffic-president-donald-trump-islamabad-peace-tamil-news-11727156





