Mehul Choksi abduction : பஞ்சாப் தேசிய வங்கியில் ரூ. 13,500 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி. அவர் கடந்த மாதம் ஆண்டிகுவா நாட்டில் இருந்து டொமினிக்காவிற்கு கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் டொமினிக்கா அரசு அவரை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது மிகவும் முட்டாள்தனமான குற்றச்சாட்டு என்று அந்நாட்டு பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் கூறியுள்ளார். சோக்ஸி கடத்தப்பட்டது தொடர்பான வழக்கினை விசாரிக்க தேவையான அத்தனை ஒத்துழைப்பையும் அவர் நாடு வழங்க தயாராக உள்ளது என்று ஸ்கெரிட் கூறியதாக டொமினிக்காவில் செயல்பட்டு வரும் இணைய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற அவர் 2018ம் ஆண்டில் இருந்து ஆண்டிகுவார் பார்புடாவில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த திட்டமிட்டுள்ள இந்தியாவிற்கு டொமினிக்கா அரசு உதவுவதாக வந்துள்ள குற்றச்சாட்டை அவர் கடுமையாக மறுத்துள்ளார். இது போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம். இது மிகவும் அபத்தமானது மேலும் இந்த குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். நீதிமன்றங்களுக்கு முன்னால் இருக்கும் ஒரு மனிதர் இந்த ஆதாரமற்ற கூற்றை பிரச்சாரம் செய்வது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறியதாக டொமினிக்க்கா நியூஸ் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
டொமினிக்காவில் கொலை செய்த ஒருவர் வெளிநாடுகளுக்கு சென்று சுதந்திரமாக இருப்பது நியாயமானதா அல்லது அவர் டொமினிக்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு பிரச்சனைகளை எதிர்கொள்வது சரியானதா என்று கேள்வி எழுப்பினார். அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் டொமினிக்காவை சேர்ந்த ஒருவரை அந்நாட்டுக்கு அனுப்ப எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை மேற்கோள்காட்டி, ஒரு நாடு அங்குள்ள மக்களை அவர்கள் வைத்திருக்கும் பணத்தின் அளவு மற்றும் அவர்கள் யார் என்பதை பொறுத்து செயல்படாது என்று கூறினார்.
நம்மிடம் உள்ள பணம் அல்லது நம்முடைய பொருளாதார நிலை என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் நாம் அனைவரும் சட்டங்களுக்கு உப்டடுகின்றோம். , அந்த நபரை நீதிமன்றங்களுக்கு முன் அழைத்து வந்து நீதிமன்றத்தின் முன் சமர்பிக்க அனைத்து உரிமைகளும் கடமையும் உள்ளது என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இளைஞர் ஒருவர் டொமினிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வழக்கு விசாரணைக்காக அவர் ஜெயிலில் காத்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய வழக்கறிஞர் வாதிடுவார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை என்றால், நீதிமன்றம் அவரை நாடுகடுத்த காரணங்கள் ஏதும் இல்லை என்பதை உணரும் போது அவர் அந்த வழக்கில் இருந்து விடுக்கப்படுவார் என்றும் அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/total-nonsense-dominica-pm-on-claims-that-his-govt-was-involved-in-mehul-choksi-abduction-319401/