India news in tamil: “முகலாய மன்னர் ஔரங்கரசீப்பால், வாரணாசியின் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டது. அதன் பிறகுதான் அங்கு ஞான்வாபி Masjid கட்டப்பட்டது. எனவே, அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது” என்று கூறி வழக்கறிஞர் விஜய் சங்கர் ரஸ்தோகி என்பவர் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிலுவையிலிருந்த இந்த வழக்கு இந்தாண்டு ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த, சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி, “ஞானவாபி Masjid அமைந்துள்ள இடத்தில் ஏற்கெனவே இந்து கோயில் இருந்ததா அல்லது வேறு ஏதாவது மற்றங்கள் செய்யப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து உண்மை அறிய இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் (Archaeological Survey of India) ஐந்து பேர் கொண்ட நிபுணர்குழுவை அமைத்து, உத்தரப்பிரதேச அரசு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அந்தக் குழுவில் குறைந்தது இரண்டு நபர்களாவது சிறுபான்மையினராக இருத்தல் வேண்டும்” என்றும் குறிப்பிட்டு இருந்தார்
மேலும், “ஆய்வு மேற்கொள்ளும்போது முதலில் தரை ஊடுருவும் ரேடார் (Ground Penetrating Radar – GPR) அல்லது ஜியோ ரேடியாலஜி (Geo-Radiology) முறையைப் பயன்படுத்தி ஆய்வுசெய்யலாம் என்றும், பின்பு தேவைப்பட்டால் நான்கு சதுர அடிக்கு மிகாமல் அகழ்வாராய்ச்சி செய்யலாம்” எனவும் அந்த உத்தரவில் தெரிவித்து இருந்தார்.
இதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்த உத்தரப்பிரதேச சன்னி வஃக்பு வாரியம் (Sunni Central Waqf Board), நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தது. இந்த அமைப்பின் தலைவர் ஜுஃபர் ஃபாரூகி (Zufar Faruqi) இது குறித்து பேசுகையியல் “இந்த உத்தரவு, இந்திய அரசியலமைப்பின் வழிபாட்டு உரிமைச் சட்டத்தை (Places of Worship (Special Provisions) Act, 1991) மீறுகிறது’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், ஞானவாபி Masjidயை நடத்தும் நிர்வாகம் அதன் வளாகத்திற்கு வெளியே உள்ள ஒரு பகுதியை காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய Masjid நிர்வாக அதிகாரி ஒருவர், “காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கபட்டுள்ள இந்த இடம் முன்பு குத்தகைக்கு வழங்கப்பட்டு இருந்தது. பின்னர் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு ஒரு போலீஸ் கட்டுப்பாட்டு அறை எழுப்பலாம் என நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இருப்பினும், வாரணாசியில் உள்ள கோயில் நடைபாதை திட்டத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன்னதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த இடத்தை கேட்டனர் என Masjid அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஞானவாபி Masjidன் 1,000 சதுர அடி கொண்ட இந்த இடத்திற்கு கோயில் அறக்கட்டளை 1,700 சதுர அடி இடம் கொடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.
அஞ்சுமான் இன்டெசாமியா மசூதியின் இணைச் செயலாளரும், ஞானவாபி Masjidன் பராமரிப்பாளருமான எஸ்.எம்.யாசின், “மசூதி குழுவின் கீழ், மூன்று நிலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மசூதியைக் கொண்டுள்ளது. இரண்டாவது சதி இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கு இடையில் ஒரு பொதுவான இடமாக உள்ளது. இரு இடங்களின் பாதுகாப்பிற்காக ஒரு கட்டுப்பாட்டு அறை கட்ட பாபர் Masjid இடிக்கப்பட்ட ஒரு வருடம் கழித்து முடிவு செய்யப்பட்டது. எனவே அது மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறைதான் தற்போது இடிக்கப்பட்டு காஷி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரபிரதேச மத்திய சன்னி வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இந்த நிலம் வரம்பற்ற காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது மற்றும் எந்த பரிவர்த்தனையும் இன்றி வழங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை வழங்குமாறு அறக்கட்டளை எங்களிடம் கோரியது, அத்தகைய இடமாற்றத்திற்கான விதிகளை சரிபார்த்த பிறகு, ஜூலை 8 அன்று அதை இறுதி செய்தோம் என்று யாசின் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச சன்னி வஃக்பு வாரியம்அமைப்பின் தலைவர் ஜுஃபர் ஃபாரூகி, “அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் வணிகரீதியானது மற்றும் மிகவும் மதிப்புமிக்கது. காஷி விஸ்வநாத் கோயில் நடைபாதை திட்டத்திற்கு இது தேவைப்படுவதால் அதிகாரிகள் எங்களிடம் அதைக் கேட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் வர்மா கூறுகையில், அறக்கட்டளைக்கும் உத்தரப்பிரதேச சன்னி வஃக்பு வாரியத்திற்கும் இடையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நிலத்துக்கும் Masjidக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நிலத்தை வக்ஃப் சொத்து என்பதால் வாங்க முடியாது. எனவே அதை பரிமாறிக்கொண்டோம், இது மதிப்பின் அடிப்படையில் செய்யப்பட்டது. Masjidக்கு ஒப்படைக்கப்பட்ட நிலம் ஸ்ரீ காஷி விஸ்வநாத் சிறப்பு பகுதி மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.” என்றுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/india-news-in-tamil-gyanvapi-mosque-gives-land-to-kashi-temple-corridor-project-325843/