திங்கள், 26 ஜூலை, 2021

லங்கேஷ் கொலை வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா கர்நாடகாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டம் (KCOCA)?

 Johnson T A

மகாராஷ்ட்ராவின் ஒழுங்கமைப்பட்ட குற்றச்சட்டம் ( Maharashtra Control of Organised Crime Act) 1999-ஐ பின்பற்றி உருவாக்கப்பட்டது கர்நாடகாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்சட்டம் 2000 (Karnataka Control of Organised Crime Act (KCOCA), 2000), மிகவும் கடுமையான சட்டமாக பார்க்கப்படும் இந்த சட்டம், 2017ம் ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலைவழக்கோடு தொடர்பு செய்யப்பட்டு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

ஏப்ரல் 22ம் தேதி அன்று, கர்நாடக உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியமான குற்றவாளியான மோகன் நாயக் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் கே.சி.ஓ.சி.ஏ குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 50 வயதாகும் அவர், லங்கேஷை கொலை செய்த குழுவில் முக்கிய அங்கமாக செயல்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சவால் விடுப்பதில் பாஜக தலைமையிலான மாநில அரசு தாமதப்படுத்திய நிலையில், கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் சகோதரி கவிதா லங்கேஷ், KCOCA குற்றச்சாட்டுகளை கைவிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

சர்ச்சைக்கு மத்தியில் இருக்கும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு நபர், ஒரு குற்றவாளி கூட, கடந்த 10 ஆண்டுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை ஒரே மாதிரியான குற்றத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலின் உறுப்பினராகக் கருதப்படுவார்.

சட்டமும் அதன் பயன்பாடும்

KCOCA சட்டம் அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டு 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. அதன் விதிகளில், கைது செய்யப்பட்டவர்களை 30 நாட்கள் காவலில் வைக்கவும், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு முன் 180 நாட்கள் வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் காவல்துறையை அனுமதிக்கிறது. மற்ற குற்றங்களின் போது விசாரணைக் காவல் 14 நாட்களும், நீதிமன்றக் காவல் 90 நாட்களும் இருக்கும். KCOCA வழக்குகளில், ஒரு குற்றத்தில் சந்தேகிக்கப்படும் நபருக்கு, முதன்மை ஆதாரங்களின் அடிப்படையில் ஜாமீன் நிராகரிக்கப்படலாம். காவல்துறையினர் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாக கருதப்படும். சட்ட ரீதியான தேவைகளுக்காக தொலைபேசி குறுக்கீடுகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

KCOCA குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மிகவும் குறைவான அளவிலேயே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. 2000 ஆண்டுகளின் ஆரம்பத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொட்டா) 2002 நடைமுறையில் இருந்ததால், இந்த சட்டத்தை பெரிதும் பயன்படுத்த தயக்கம் காட்டியது.

கடலோர கர்நாடகாவின் அங்கோலாவில் வர்த்தகர் ஆர் என் நாயக்கை 2013 டிசம்பரில் சுட்டுக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா பன்னஞ்சே ராஜாவுடன் தொடர்புடைய ஒரு கும்பலுக்கு எதிராக இந்த சட்டத்தை கர்நாடக காவல்துறை பயன்படுத்தியது. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை ஏதும் இல்லை என்றாலும் 2015ம் ஆண்டு மொரோக்கோவில் இருந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்காக கைது செய்யப்பட்ட பலர் எதிர்கொண்ட பல குற்றப்பத்திரிகைகளின் காரணமாக KCOCA சட்டம் அவர் மீது பாய்ந்தது.

இந்த வழக்குகள் தற்போது சிறப்பு KCOCA நீதிமன்றத்தில் உள்ளன. மாநிலத்தில் 17 KCOCA வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழு KCOCA சட்டத்தை 2018ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த விசாரணைக் குழு, கௌரி லங்கேஷை கொல்ல குழு ஒன்று உருவாக்கிய, வலதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடைய 17 நபர்களை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவர்கள் 2013 – 18 கால கட்டங்களில் மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் இந்த சட்டம் அவர்கள் மீது பாய்ந்தது.

இந்த பிரிவுகள் தொடர்பாக நீதிமன்றங்களின் கருத்துகள் என்ன?

2019ம் ஆண்டு கர்நாடகாவில் 12ம் வகுப்பு வினாத்தாள்கள் கசிவான வழக்கில், சட்டவிரோத செயலைத் தொடர்வது என்பதன் வரையறை முந்தைய 10 ஆண்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது என்று அர்த்தமல்ல என்று உயர் நீதிமன்ற்ம கூறியது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற சிண்டிகேட்டின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைக்கு உதவிய நபர்களுக்கு எதிராக இந்த சட்டத்தை, கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் பயன்படுத்தலாம் என்று KCOCA சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் இருக்கும் இதே போன்ற சட்டத்தை சுட்டிக் காட்டி, ஒருவர் இது போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தில் ஈடுபடவில்லை என்ற போதிலும், அந்த குழுவில் உள்ள ஒரு நபருடன் இருக்கும் போது அவருக்கு எதிராக MCOCA சட்டத்தின் கீழ் பிரிவு 3(2) வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த இரண்டு சட்டங்களும் ஒரே மாதிரியானவை என்று கூறப்பட்டுள்ளது.

லங்கேஷ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்

லங்கேஷ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அமோல் காலே மற்றும் ஷரத் கலாஸ்கர் ஆகியோரும் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே மற்றும் கன்னட அறிஞர் எம்.எம்.கல்பூர்கி, 77 , எழுத்தாளர் கே.எஸ்.பகவானைக் கொல்ல முயற்சி செய்தது மற்றும் மகாராஷ்டிராவில் பயங்கரவாத செயல்களைத் திட்டமிடுவது தவிர. இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளில் 15 பேரில் நான்கு பேருக்கு எதிராக பல வன்முறை குற்றங்களை காவல்துறையினர் மேற்கோள் காட்டினர்.

கொலைகளுக்கு உத்வேகம் அளித்ததாகக் கூறப்படும் வலதுசாரிக் குழு சனாதன் சன்ஸ்தாவின் அனுதாபியான நாயக், முக்கிய குற்றம் சாட்டப்பட்ட காலே மற்றும் தேக்வேகருடன் நெருக்கமாக தொடர்புடையவர் என்று எஸ்ஐடி விசாரணையில் கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட நான்கு கொலைகாரர்களுக்கு அடைக்கலம் கொடுக்க லங்கேஷின் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த முக்கிய சதிகாரர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவின் தாக்கம் எப்படியாக இருக்கும்?

ஏப்ரல் 22 ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவு KCOCA குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி மேலும் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் முறையிடு செய்வார்கள் என்று கர்நாடக காவல்துறையினர் கருதுகின்றனர்.

நாயக் வழக்கில் கே.சி.ஓ.சி.ஏ குற்றச்சாட்டுகளை கைவிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல் துறை தலைமையகத்திலிருந்து கர்நாடக உள்துறைக்கு ஒரு திட்டத்தை அனுப்பியது. மேல்முறையீடு குறித்து பாஜக அரசு இன்னும் முடிவு செய்யாத நிலையில், கவிதா லங்கேஷ் இப்போது உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

source