வெள்ளி, 30 ஜூலை, 2021

ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

 Covid-19 vaccine for children likely in august, Health Minister Mansukh Mandaviya, குழந்தைகளுக்கு கோவிட் 19 தடுப்பூசி, கோவாக்சின், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, covid 19 vaccines, covaxine, union govt, coronavirus, covid vaccine for children, india

அரசாங்கம் அடுத்த மாதம் முதல் கோவிட் 19க்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் கூறினார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர் பல நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி உரிமங்களைப் பெறுவதால், மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது என்று கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கக்கூடும் என்றும், ஒப்புதல் பெற்ற பிறகு அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கொள்கை வகுக்கப்படும் என்றும் மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

டி.என்.ஏ தடுப்பூசிகளை உருவாக்கி வரும் ஜைடஸ் காடிலா, 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் சோதனைகளை முடித்துள்ளதால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தடுப்பூசி எதிர்காலத்தில் கிடைக்கக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் 2-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு மருத்துவ தடுப்பூசி பரிசோதனைகளை நடத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது.

ஃபைசரின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி ஐரோப்பிய ஒன்றியத்தில் 12-15 வயதுடைய இளம் சிறார்களுக்கு பயன்படுத்த சோதனை செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளில் இன்னும் பரிசோதிக்கப்பட்டுவருகிற கோவாக்சினை தயாரிக்க இந்தியாவின் உள்நாட்டு திறனைப் பயன்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஏனென்றால், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடுவது என்பது குழந்தைகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டாலும் கூட, தடுப்பூசி தேவைக்கு மிகவும் குறைவாக உள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.

ஃபைசர் தடுப்பூசிகள் உண்மையில் இந்தியாவுக்கு எவ்வளவு விரைவாக வரக்கூடும் என்பதில் நிச்சயமற்ற தன்மையும் உள்ளது, நாட்டின் தடுப்பூசி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறினார்.

ஃபைசர் உடன் ஒப்பிடும்போது, ​​பாரத் பயோடெக் பெரிய ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தடுப்பூசி தயாரிப்பாளர் கோவாக்சின் தடுப்பூசியை 2 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது. பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால் அதன் தடுப்பூசி அதிக எண்ணிக்கையிலான மக்களை சென்றடையும்.

80 சதவீத கவரேஜ் உத்திப்படி, 104 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமான அளவில் அரசாங்கம் திட்டமிட வேண்டும். எனவே, இந்த நடைமுறைக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி என்றால் குறைந்தது 208 மில்லியன் டோஸ் தேவைப்படும். மூன்று டோஸ் தடுப்பூசி விஷயத்தில், தடுப்பூசிகளின் தேவை மிக அதிகமாக இருக்கும்.

முன்னதாக, எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கச் செய்வது ஒரு மைல்கல் சாதனையாக இருக்கும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், வெளிப்புற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் இது வழிவகுக்கும் என்று கூறியிருந்தார். குழந்தைகளுக்கு பெரும்பாலும் COVID-19 இன் லேசான நோய்த்தொற்றுகள் இருந்தாலும், சில அறிகுறிகளற்றவையாக இருந்தாலும், அவை நோய்த்தொற்றை எடுத்துச் செல்பவைகளாக இருக்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

COVID-19 தொற்றுநோயால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஆய்வுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய எய்ம்ஸ் தலைவர், “பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், தடுப்பூசி போடுவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும். தடுப்பூசி என்பது தொற்றுநோயிலிருந்து வெளியேறுவதற்கான வழி” என்று கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/covid-19-vaccine-for-children-likely-in-august-health-minister-mansukh-mandaviya-326762/