Krishn Kaushik
Demchok : 26 7 2021 கிழக்கு லடாக்கின் டெம்சோக்கில் உள்ள சார்திங் நலாவின் இந்திய பகுதிகளில் சீனர்கள் முகாமிட்டிருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியிருப்பவர்கள் சாதாரண சீன பிரஜைகள் என்று கூறும் அதிகாரிகள், அவர்களை திரும்பிப் போக கூறி வலியுறுத்திய பிறகும் அங்கேயே தங்கியிருப்பதை உறுதி செய்துள்ளனர்.
டெம்சோக்கில் இதற்கு முன்பும் இந்தியா மற்றும் சீனா துருப்புகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது. 1990களில் இருநாட்டு அதிகார மட்ட குழுவினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், டெம்சோக் மற்றும் த்ரிக் ஹைட்ஸ் (Demchok and Trig Heights) போன்ற உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் இருக்கும் பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொண்டனர்.
சமர் லுங்பா, டெப்சாங் புல்ஜ், பாயிண்ட் 6556, சாங்லங் நாலா, கொங்கா லா, பாங்காங் த்சோ வட கரை, ஸ்பாங்கூர், மவுண்ட் சஜூன், டம்செல் மற்றும் ச்சுமர் போன்ற 10 பகுதிகள் உண்மையான எல்லைப் பகுதியில் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்ட பகுதிகளாக, வரைபடங்கள் பரிமாறிக் கொண்ட பிறகு, அடையாளம் காணப்பட்டது.
சர்ச்சைக்குரியதாக பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த 12 பகுதிகளைத் தவிர அல்லது எல்.ஐ.சி எங்குள்ளது என்பதில் இரு தரப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை ஆரம்பமான பிறகு, கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள எல்.ஐ.சியில் ஐந்து சர்ச்சைக்குரிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள கே.எம்.120 பகுதி, பி.பி.15, மற்றும் ஷையோக் சுலா பி.பி.17.ஏ, ரேச்சின் லா, ரேஸாங் லா ஆகியவை இந்த பகுதிகள் ஆகும்.
கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்திலான 12வது சுற்று பேச்சுவார்த்தைக்கு திங்கள் கிழமை அன்று முன்மொழிவு செய்தது சீனா. ஆனால் திங்கள் அன்று (ஜூலை 26), 1999ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில், கார்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவே இந்த பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டது இந்திய அரசு. கார்ப்ஸ் கமாண்டர்-மட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அல்லது அதற்கு முன்னதாக நடைபெற வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், விவரங்களை அறிந்த அதிகாரிகள், கார்ப்ஸ் கமாண்டர் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டாலும், இரு தரப்பினரும் ஹாட்லைன் தொடர்பாக தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மோதல் தொடங்கியதிலிருந்து, இரு தரப்பினரும் தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldie), சுஷுல் போன்ற பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட முறை இரு தரப்பினரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து உராய்வு பகுதிகளிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சீன துருப்புகளை உடனே நீக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற காரணத்தால் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. சீனாவும் சர்ச்சையை குறைக்கவே விரும்புகிறது. கூடுதலாக ஆழமான பகுதிகளில் உள்ள சீன துருப்புகள், மற்ற இடங்களில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு, அவர்களின் முந்தைய தளங்களுக்கு திரும்பி பெறப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நிலைமை தற்போது நிலையாக உள்ளது. 2019ம் ஆண்டு இருந்த நிலையைப் போன்று அது இல்லை. இருப்பினும் கடந்த ஆண்டுக்கு தற்போதைய நிலை கொஞ்சம் சிறந்ததாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்து சீனாவால் எந்த ஒரு ஊடுருவல்களும் ஏற்படவில்லை என்றும் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு ஏதும் நிகழவில்லை என்றும் கூறியுள்ளார் மூத்த அரசு அதிகாரி.
அவர்கள் முக்கிய புள்ளிகளில் இருந்து விலக விரும்புகின்றனர். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளனர் என்று அதிகாரி ஒருவர் கூறினார். ராணுவ துருப்புகள் அங்கிருந்து வெளியேறும். ஆனால் அதற்கு நேரம் ஆகும் என்றும் அவர் கூறினார்.
இரண்டு தரப்பினரும் “கண்ணுக்கு கண்” என்ற நிலையில் இல்லை. நம்பிக்கை இழப்பு ஏற்பட்டிருப்பதே, முடிவுகள் எடுப்பதை தாமதம் ஆக்கியுள்ளது என்று கூறிய அவர், இந்த காரணத்தால் தான் இரு பகுதிகளிலும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ராணுவ வீரகள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
கிழக்கு லடாக்கில் சுழற்ச்சி முறையில் ராணுவ வீரர்களை மாற்றி வருவதாகவும், பில்லேட்டிங், ஆயுத கிடங்கு மற்றும் பீரங்கி நிலைகள் உள்ளிட்ட ராணுவ உள்கட்டமைப்பை மிகவும் வேகமாக எழுப்பி வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களின் ஆழமான பகுதிகளில், சீன துருப்புக்களின் கிட்டத்தட்ட நான்கு பிரிவுகள், சிக்கலான சிஞ்சியாங் மற்றும் திபெத் மாகாணங்களை இணைக்கும், அக்சாய் சின் வழியாக செல்லும் ஜி 219 நெடுஞ்சாலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்தியாவும் அதன் ராணுவ வேலைகளையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தவும், பிராந்தியத்தில் புதிய தலைமுறை உபகரணங்களை சேர்க்கவும் இந்த நேரத்தை பயன்படுத்தியுள்ள்ளது.
குளிர்காலத்தில், இரு தரப்பினரும் முன்னோடியில்லாத வகையில் துருப்புக்களை பங்கோங் த்சோவின் வடக்குக் கரையிலும், சுஷுல் துணைத் துறையில் கைலாஷ் மலைத்தொடரின் உயரத்திலும் நிலை நிறுத்திய காலத்தில், சீனா 10 நாட்களுக்கு ஒருமுறை விரைவாக துருப்புகளை சுழற்சி முறையில் மாற்றியது.
இந்த பகுதிகளில் தான் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத காலகட்டத்தில், பல ஆண்டுகள் கழித்து, எல்லைக்காக துப்ப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பிப்ரவரி முதல் துருப்புகள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. ரெசாங் லா மற்றும் ரெச்சின் லா ஆகிய இடங்களில் சில நூறு மீட்டர் தொலைவில் இருந்த இரு தரப்பு துருப்புகளும் தங்கள் படைகளை பின்வாங்கினர்.
இந்த படைகள் பின்வாங்கப்பட்ட 48 மணி நேரத்தில் 10ம் கட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 20ம் தேதி அன்று நடைபெற்றது. அதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் உள்ள ரோந்து புள்ளிகள் 15 மற்றும் 17ஏ-களில் சீனாவின் துருப்புகள் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர். தெப்சாங் சமவெளிகளில் உள்ள ரோந்து புள்ளிகளுக்கு செல்ல இந்திய வீரர்களுக்கு தடையாய் அவர்கள் அமர்ந்துள்ளனர்.
கைலாஷ் மலைத்தொடரை சீனா மீண்டும் கைப்பற்ற முயற்சித்தால், நாங்கள் வேறு இடத்திற்கு செல்வோம் என்று அவர் கூறினார். அப்படியான ஒரு ஆக்கிரமிப்பில் சீனா ஈடுபட முயற்சி மேற்கொண்டால் அடுத்த கட்ட விரிவாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்ற தெளிவான செய்தியையும் அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/in-demchok-chinas-tents-on-indian-side-no-date-yet-for-talks-326259/