ஞாயிறு, 25 ஜூலை, 2021

கர்நாடகாவில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் 283 கிராமங்கள்

 கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழையால் 283 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் ஒன்பது பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வட கர்நாடக மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

கர்நாடக மழை வெள்ளம்

இதனால், கிருஷ்ணா, காவிரி, துங்கபத்ரா, பீமா, கபிலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 45 தாலுகாக்களில் உள்ள 283 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கர்நாடகாவில் கனமழைக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

25 07 2021 

source https://news7tamil.live/karnataka-rains-updates-283-village-drowned-in-flood-and-9-died.html