செவ்வாய், 27 ஜூலை, 2021

அசாம்- மிசோரம் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் என்ன?

 Assam-Mizoram border dispute

The Assam-Mizoram border dispute : திங்கள் கிழமை அன்று , பழைய எல்லைப் பிரச்சனை தொடர்பாக, அசாம் மற்றும் மிசோராம் மாநில எல்லையில் நடைபெற்ற கலவரத்தில் குறைந்தது 6 அசாம் காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அசாம் மற்றும் மிசோரம் மாநில மக்கள் ஒரே வாரத்தில் இரண்டு முறை கலவரத்தில் ஈடுபட்டதால் 8க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடைகள் மற்றும் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. வடகிழக்கில், குறிப்பாக அசாமுக்கும், அதில் இருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக இருந்த எல்லைப் பிரச்சனையை இந்த கலவரங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது என்ன?

அசாமின் கச்சார் மாவட்டத்தில் உள்ள லைலாப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர், மிசோரம் மாநிலத்தில் உள்ள கோலாஷிப் மாவட்டத்திலுள்ள வைரெங்ட்டே (Vairengte) கிராம மக்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்திற்கு ஒரு நாளுக்கு முன்பு அசாமில் உள்ள கரிம்கஞ்ச் பகுதி மக்கள் மிசோரம் மாநிலத்தின் மமித் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுடன் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 9ம் தேதி அன்று விவசாயி ஒருவரின் குடிசை மற்றும் இரண்டு மிசோரம் மாநிலத்தை சேர்ந்த நபர்களின் பாக்கு தோட்டத்திற்கு தீ வைத்தனர்.

கச்சாரில் நடைபெற்ற இரண்டாவது கலவரத்தின் போது, லைலாப்பூரில் உள்ள மக்கள் சிலர் மிசோரம் மாநில காவல்த்துறையினர் மீதும், மிசோரம் பகுதி மக்களின் மீதும் கற்களை வீசி தாக்குதலை நடத்தினார்கள். பதில் தாக்குதல் நடத்த மிசோரம் மக்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர் என்று கோலாஷிப் துணை ஆணையர் லலிதங்லியானா கூறினார்.

வன்முறைகள் மற்றும் கலவரங்களுக்கு காரணம் என்ன?

அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, எல்லைப் பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் சொந்தம் கொண்டாட கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனாலும் லைலாப்பூரை சேர்ந்த சிலர் இந்த ஒப்பந்தத்தை மீறி, சில தற்காலிக குடிசைகளை எல்லைப் பகுதிகளில் கட்டினார்கள். மிசோரம் பகுதி மக்கள் அந்த குடிசைகளுக்கு சென்று தீயிட்டனர்.

சர்ச்சைக்கு உள்ளான நிலம் அசாம் மாநிலத்திற்கு சொந்தமானது என்று அப்போதைய கச்சார் மாவட்ட துணை ஆணையர் கீர்த்தி ஜலீல் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

அக்டோபர் 9 சம்பவத்தில், அசாம் உரிமை கோரிய நிலம் நீண்ட காலமாக மிசோரத்தில் வசிப்பவர்களால் பயிரிடப்பட்டுள்ளது என்று மிசோரம் மாநில அதிகாரிகள் கூறினார்கள். நிலம் வரலாற்று ரீதியாக மிசோரம் குடியிருப்பாளர்களால் பயிரிடப்பட்டிருந்தாலும், காகிதத்தில் அது கரிம்கஞ்சின் அதிகார எல்லைக்குட்பட்ட சிங்லா வனப்பகுதிக்குள் வருகிறது என்று கரிம்கஞ்ச் பகுதி டி.சி. அன்பமுதன் எம்.பி. இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். விரைவில் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். மிசோரம், அசாம்மின் பாரக் பள்ளதாக்கில் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இரண்டு மாநிலங்களும் வங்க தேசத்துடன் தங்களின் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

அசாம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக நாட்டுக்குள் நுழைந்த வங்கதேசத்தினர் குடியிருந்து வருகின்றனர் என்று மிசோரம் சிவில் சொசைட்டி குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர். சட்ட விரோதமாக உள்ளே குடியிருக்கும் வங்க தேசத்தினர் தான் இது போன்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். அவர்கள் இங்கே வந்து எங்களின் குடிசைகளை, எங்களின் தோட்டங்களை அடித்து நொறுக்கி, எங்கள் காவல்துறையினர் மீது கல்லெறிகின்றனர் என்று மிசோ சிர்லாய் பாவ்ல் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் பி. வான்லல்தானா கூறியுள்ளார்.

இந்த எல்லைத் தகராறு எவ்வாறு உருவானது?

வடகிழக்கு மாநிலங்களில் சிக்கலான எல்லை சமன்பாடுகளில், அசாம் மற்றும் மிசோரம் மக்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் அசாம் மற்றும் நாகாலாந்து குடியிருப்பாளர்களுக்கிடையில் இருப்பதை விட குறைவாகவே ஏற்படுகிறது.

ஆயினும்கூட, இன்றைய அசாமுக்கும் மிசோரமுக்கும் இடையிலான எல்லை, 165 கி.மீ நீளம் கொண்டது. காலனித்துவ காலத்திற்கு முந்தையது. அசாமில் இருந்து மிசோரம் பிரிக்கப்படும் முன்பு அது லுஷாய் ஹில்ஸ் என்ற மாவட்டமாக அழைக்கப்பட்டது.

1875 ஆம் ஆண்டு வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறை (Bengal Eastern Frontier Regulation (BEFR) Act, 1873) சட்டத்திலிருந்து பெறப்பட்ட 1875 அறிவிப்பின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று மிசோரம் நம்புவதாக ஒரு மிசோரம் அமைச்சர் கடந்த ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.

மிசோ சமூகத்தினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்ற காரணத்தால், 1933ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எல்லைக்கு எதிராக மிசோ தலைவர்கள் கடந்த காலத்தில் வாதம் செய்தனர். அசாம் அரசாங்கம் 1933 எல்லை நிர்ணயிப்பைப் பின்பற்றுகிறது, அதுதான் மோதலின் புள்ளி என்று கூறினார் வான்லல்தனா.

இந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு முன்பு பிப்ரவரி மாதம் 2018ம் ஆண்டு கலவரம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சந்தர்ப்பத்தில், MZP காட்டில் விவசாயிகளுக்காக ஒரு மர ஓய்வு இல்லத்தை கட்டியிருந்தது,இது அசாம் பிரதேசத்தில் இருப்பதாகக் கூறி அசாம் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அதை இடித்தனர். அப்போது MZP உறுப்பினர்கள் அஸ்ஸாம் பணியாளர்களுடன் மோதினர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற மிசோரம் பத்திரிக்கையாளர்களையும் தாக்கினார்கள் அசாம் அதிகாரிகள்.

27 7 2021 

source https://tamil.indianexpress.com/explained/the-assam-mizoram-border-dispute-and-its-roots-in-two-notifications-dating-to-1875-and-1933-326576/