வெள்ளி, 30 ஜூலை, 2021

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வீரர்களின் ஆடைத் தேர்வு எவ்வாறு பேசுபொருளானது?

 Ektaa Malik

Tokyo Olympics : பதக்கப்பட்டியல்கள், புதிய உலக சாதனைகள், கண்கவர் செட்டுகள் போன்றவை ஒலிம்பிக்கை சுற்றியுள்ள உரையாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறும். தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேசுபொருளாய் மாறியுள்ளது விளையாட்டுத் துறையில் நிலவி வரும் பாலியல்மயமாக்கல் போக்கு. ஜெர்மனியின் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணி பாரம்பரியமான லியோடார்டுகளுக்கு பதிலாக, யூனிடார்டுகளை அணிந்து போட்டியில் பங்கேற்ற போது இந்த சொற்றொடர் தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது.

புதிய பக்கத்தை திருப்பிய வீராங்கனைகள்

ஜெர்மனியின் பெண்கள் ஜிம்னாஸ்டிக் குழுவினர் தாங்கள் தேர்வு செய்த ஆடைகள் மூலமாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றனர். தகுதி சுற்றுகளுக்காக நடைபெற்ற போட்டிகளில் சாரா வோஸ் (Sarah Voss), பாலின் ஸ்கேஃபர் பெட்ஸ் (Pauline Schaefer-Betz), எலிசபெத் செய்ட்ஸ் (Elisabeth Seitz) , கிம் புய் (Kim Bui) அடங்கிய இந்த குழு சிவப்பு மற்றும் வெள்ளை நிற முழு உடலையும் மறைக்கும் யூனிடார்டுகளை அணிந்து கொண்டனர். இது தொடர்பாக ஏற்கனவே கலந்து ஆலோசனை செய்த அவர்கள் பிறகு அந்த ஆடைகளை அணைந்து போட்டிகளில் கலந்து கொண்டனர். சுதந்திரமான தேர்வுகளையும், சகஜமாக உணர வைக்கும் உடைகளை அணிந்து கொள்ள பெண்களை ஊக்குவிக்கவும் முயற்சிக்கும் வகையில் இந்த ஆடைகளை அவர்கள் அணிந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஐரோப்பாவில் நடைபெற்ற ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற இந்த அணி அப்போதும் யூனிடார்டுகளையே அணிந்தனர்.

Olympics, Olympics news

லியோடார்ட் Vs யூனிடார்ட்

ஜிம்னாஸ்டிக் மற்றும் நடனங்களுக்கு ஏற்ற வகையில் விரிந்து கொடுக்கும் தன்மையை கொண்ட ஸ்பாண்டெக்ஸ் மற்றும் லைக்ரா வகை துணிகளை கொண்டு லியோடார்ட் மற்றும் யூனிடார்ட் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஜெர்மன் நாட்டு அணியினர் அணிந்திருந்த ஆடை யூனிடார்ட் வகையை சார்ந்தது. இது போட்டியாளரின் உடலை கைகளில் இருந்து கணுக்கால் வரை முழுமையாக மறைக்கிறது. இது பாரம்பரிய ஆடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பிகினி- ஆடைகள் போன்று வெட்டப்பட்டு தைக்கப்படும் லியோடார்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. உடலை இறுக்கும் ஒரே துணியால் தகைப்படும் ஆடை உடலின் மேல் பகுதியை மூடி , கால்கள் முழுமையாக தெரியும்படியான ஆடைகளாக இருந்தன.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பெண் விளையாட்டு வீரர்கள் மற்றும் நடனக்கலைஞர்கள் அணைந்து வரும் இந்த வகையிலான ஆடையை உருவாக்கியவர் பிரான்ஸை சேர்ந்த ஜூல்ஸ் லியோடார்ட். மற்றொரு பக்கம் ஆண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிகின்றனர். ஒலிம்பிக் விதி புத்தகம் விளையாட்டு வீரர்களுக்கு முழு உடல் ஆடைகளை அணிய அனுமதிக்கிறது, ஆனால் ஒரு தடகள வீரர் அதை மத காரணங்களுக்காக தேர்வு செய்த நிகழ்வுகள் அரிதாகவே நிகழ்ந்துள்ளது.

ஆடை தேர்வுக்காக அபராதம் செலுத்திய நார்வே அணி

விளையாட்டு உலகில் ஆடைத் தேர்வுக்காக தலைப்பு செய்திகள் இடம் பெற்றவர்கள் ஜெர்மனி அணியினர் மட்டும் அல்ல. நார்வே நாட்டின் கடற்கரை கைப்பந்து விளையாட்டு வீராங்கனைகள், பிகினி கீழாடைகளுக்கு பதிலாக ஷார்ட்ஸ் அணிந்து ஐரோப்பிய பீச் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றனர்.

மண்ணில் கீழே விழ வேண்டிய சூழல் ஏற்படுவதால் பிகினி கீழ் ஆடைகள், விளையாட்டுக்கு ஏற்ற ஆடைகள் என்ற முடிவுக்கு வந்த நார்வே அணி ஷார்ட்ஸ் அணிந்து விளையாட சென்றனர். ஒரு சிலரால் பிகினி ஆடைகள் பெண்களை இழிவு படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது என்பதால் ஷார்ட்ஸை தேர்வு செய்தனர். இந்த அணிக்கு ஐரோப்பிய கைப்பந்து சங்கம் 1500 யூரோக்கள் அபராதம் விதித்தது. தங்கள் நாட்டு வீராங்கனைகளுக்கு ஆதரவு தரும் வகையில் நார்வே நாடு அந்த அபராதத்தை ஏற்றுக் கொண்டது. பாப் ஸ்டார் பிங், இந்த அபராத தொகையை செலுத்த தானாக முன்வந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Olympics, Olympics news

இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

ஜெர்மன் நாட்டின் பெண்கள் அணியினர் முடிவுக்கு உலக அளவில் ஆதரவு கிடைத்தது. நான்கு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற சைமோன் பில்லி இந்த முடிவை கைத்தட்டி வரவேற்றார். இருப்பினும் அவர் பிகினி-கட் லியோடார்ட் ஆடை அணியவே விருப்பம் தெரிவித்தார். இந்த ஆடை அவரை உயரமாக காட்டுவதாக அவர் கூறினார்.

அணியின் நிலைப்பாட்டின் நேரடி விளைவாக, ஒலிம்பிக் ஒளிபரப்பு சேவைகள் “பெண் விளையாட்டு வீரர்களின் வெளிப்படையான செக்ஸுவலைஸ்ட் புகைப்படங்களை காட்சிப்படுத்துவதை கட்டுப்படுத்த அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, வழிகாட்டுதல்களை புதுப்பித்து அறிவித்தது. பாலியல் சமத்துவம் மற்றும் நேர்மையான ஒளிபரப்பினை நிகழ்வுகளின் போது நடத்து வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. “தோற்றம், உடை அல்லது நெருக்கமான உடல் பாகங்கள் ஆகியவற்றில் தேவையின்றி கவனம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/explained/how-tokyo-olympics-have-turned-the-lens-on-sexualisation-of-sport-327170/