வியாழன், 22 ஜூலை, 2021

ஸ்பைவேரை அரசுகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது” 3 வாரங்களுக்கு முன்பே எச்சரித்த என்.எஸ்.ஒ

 22 7 2021 Project Pegasus : இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமம், அதன் முதன்மை ஸ்பைவேரை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவதற்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்னர், ஒரு கொள்கை ஆவணத்தில், பெகாசஸின் வாடிக்கையாளர்களான அரசு மற்றும் அரசு நிறுவனங்கள் மக்களின் அடிப்படை சுதந்திரங்களைக் கட்டுப்படுத்த ஆசைப்படக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூன் 30 அன்று தயாரிக்கப்பட்ட கொள்கை ஆவணத்தில், 40 நாடுகளில் என்எஸ்ஓ குழுமத்திற்கு அரசாங்கம் மற்றும் அரசாங்க முகமைகள் என 60 வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்று கூறியுள்ளது. அந்த 40 நாடுகளில் 51% உளவுத்துறை முகமைகளாலும், 38% அமலாக்கத்துறைகளாலும் 11% ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது என்று கூறியுள்ளது.

Transparency and Responsibility Report 2021 என்று தலைப்பிடப்பட்ட அந்த கொள்கை ஆவணத்தில், அரசியல்வாதிகள், என்.ஜி.ஓக்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் என பலருக்கு எதிராக என்.எஸ்.ஓவின் ஸ்பைவேர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டுள்ளது என்றும், அதில் முக்கியமான மனித உரிமைகள் அபாயம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்த மனித உரிமை அபாயங்கள், தேசிய பாதுகாப்பு அல்லது சட்ட அமலாக்கத்துடன் தொடர்பில்லாத காரணங்களுக்காக, வழக்குக்கு ஆதரவாக அல்லது தனிநபர்களுக்கு சங்கடமாக இருக்கும் தகவல்களைப் பெறுவது அல்லது அரசு மற்றும் அரசு முகமைகளுக்கு தொடர்புடைய அங்கீகரிக்கப்படாத பணியாளர்களால் சாத்தியமான தவறான பயன்பாடு ஆகியவை அடங்கும் என்று NSO குழு அறிக்கை குறிப்பிட்டது.

இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசங்காத்தால் இயக்கப்படும் கூடுதல் அபாயங்கள் அதிகம் உள்ளது. கைது செய்தல், தடுப்புக் காவலில் வைத்தல் போன்ற முறைகேடுகள், சட்ட மற்றும் நீதித்துறை செயல்முறைகளுடன் தொடர்புடைய உரிமைகளும் இதில் அடங்கும். அத்துடன் சுந்திரமாக சிந்தித்தல், மனசாட்சி, மதம் , சுதந்திரமாக இயங்குதல், மற்றும் சாதாரண குடிமை வாழ்வில் பங்கேற்றல் போன்றவற்றிலும் தலையிடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரகசியத்தன்மை கொள்கைகள், “மேலும் பல ஒட்டுக்க்கேட்பு வேலைகளை செய்யும் திறனை” கட்டுப்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் என்.எஸ்.ஓ. குறிப்பிட்டுள்ளது. எங்கே உரிமை மீறல்கள் நடைபெற்றிருக்கிறதோ அங்கே தங்களின் அதிகார எல்லைக்குள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பயனுள்ள தீர்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அந்நாட்டு அரசுகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

மே 2020 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலகட்டத்தில், ஸ்பைவேர் தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக 12 புகார்களை விசாரித்ததாக கூறியுள்ளது இந்த இஸ்ரேலி நிறுவனம். பெகாசஸிற்கு வந்த புதிய வாய்ப்புகளில் கிட்டத்தட்ட 15% வாய்ப்புகளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பான கவலை காரணமாக நிராகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது அந்த நிறுவனம். 2016ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான வாய்ப்புகளை அதன் மறுஆய்வுக்கு பிறகு நிராகரித்துள்ளதாக கூறியுள்ளது. இதில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐந்து வாடிக்கையாளர்கள் உள்ளனர். தவறாக பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விசாரணையை தொடர்ந்து அவர்கள் சிஸ்டமில் இருந்து நீக்கப்பட்டுவிட்டனர் என்று கூறியுள்ளது என்.எஸ்.ஓ.

அனைத்து வாடிக்கையாளர் ஒப்பந்தங்களிலும் குறைந்தபட்சம், மனித உரிமைகள் இணக்க விதிமுறைகள், வாடிக்கையாளர்களிடமிருந்து அர்ப்பணிப்புடன், நியாயமான மற்றும் சட்டபூர்வமான தடுப்பு மற்றும் கடுமையான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் விசாரணைக்கு மட்டுமே என்.எஸ்.ஓவின் அமைப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கோருவதாக என்.எஸ்.ஓ. கூறியுள்ளது.

எவ்வாறாயினும், வாடிக்கையாளர் செயல்பாடுகளை திறம்பட கண்காணித்தல் தொடர்பான உடனடி நுண்ணறிவு இல்லாத நிலை ஒரு குறிப்பிடத்தக்க சவால் என்றுஎன்று அறிக்கை ஒப்புக் கொண்டது. ஒப்பந்தத்தின் படி வாடிக்கையாளர்கள் அவர்களின் கணினியில் பதிவு செய்யப்படும் தகவல்களை டேம்பர் ப்ரூஃப் முறையில் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனை தர மறுக்கும் போது வாடிக்கையாளரின் கணினியைப் பயன்படுத்துவதற்கான உரிமையை உடனடியாக நிறுத்துவதற்கு வழிவகுக்கும்” என்று அது கூறியது.வாடிக்கையாளரின் கணினியைப் பயன்படுத்துவதற்கான உரிமையை உடனடியாக நிறுத்துவதற்கு வழிவகுக்கும்” என்று அது கூறியது

உலகெங்கிலும் பெகாசஸை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான சமீபத்திய அறிக்கைகள் குறித்து நிறுவனம் விசாரணையைத் தொடங்கியுள்ளதா என்றும் அதன் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படுமா என்றும் என்.எஸ்.ஓ குழுமத்தின் துணைத் தலைவர் சைம் கெல்ஃபாண்டுக்கு கடிதம் எழுதியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். அதன் பதிலுக்காக காத்திருக்கின்றோம்.

தவறான பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் 0.5% க்கும் குறைவான நிகழ்வுகளாகும். மனித உரிமைகள், ஊழல் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களுக்காக 55 நாடுகளை முன்கூட்டியே தடைசெய்ததாக என்எஸ்ஓ குழு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பெகாசஸை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

பெகாசஸுக்கு உரிமம் வழங்குவதற்காக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு ஏற்றுமதி கட்டுப்பாட்டு அமைப்பால் என்.எஸ்.ஓ. நிறுவனம் கண்டிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், ஏற்றுமதி உரிமங்களுக்கான விண்ணப்பம் “சில சந்தர்ப்பங்களில்” மறுக்கப்பட்டதாகவும் தி க்ரூப் செய்தி வெளியிட்டுள்ளது. நிறுவனம் தனது தயாரிப்புகளை பல்கேரியா மற்றும் சைப்ரஸ் நாடுகளில் இருந்தும் ஏற்றுமதி செய்கிறது.

உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக என்.எஸ்.ஓ. விசாரணை செய்த 12 புகார்களில் 10 புகார்களை மறு ஆய்வு செய்துள்ளதாக தி க்ரூப் கூறியுள்ளது. அவற்றில் 3 புகார்கள் நடவடிக்கை எடுக்கத்தக்கவை. கூடுதல் தணிப்பு நடவடிக்கைகள் இரண்டு புகார்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருடனான ஒப்பந்தத்தை முற்றிலுமாக முறித்துள்ளது என்.எஸ்.ஓ. மீதம் 7 புகார்கள், தி க்ரூப்பின் முதல்நிலை மறுஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த போதுமான தகவல்கள் அதில் இல்லை அல்லது அல்லது நிறுவனத்தின் தயாரிப்புகளுடன் தவறாக இணைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஊடக நிறுவனங்களால் வெளியிடப்பட்ட தொலைபேசி எண்கள் பட்டியல் பெகாசஸின் இலக்குகள் அல்லது சாத்தியமான இலக்குகளின் பட்டியல் அல்ல என்று புதன்கிழமை ஒரு ஊடக வெளியீட்டில் என்எஸ்ஓ குழுமம் தெரிவித்துள்ளது.

இது ஃபோர்பிடன் ஸ்டோரிஸ் தலைமையிலான, ஊடகவியல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள, நன்கு திட்டமிடப்பட்ட மீடியா காம்பைன் போதும் போதும் என்றிருக்கிறது. உண்மைகளை முழுமையாக புறக்கணித்ததன் காரணமாக, இந்த விஷயத்தில் ஊடக விசாரணைகளுக்கு இனி பதிலளிக்க மாட்டோம் என்று செய்தி அறிக்கை ஒன்றில் என்.எஸ்.ஓ. குறிப்பிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/project-pegasus-3-weeks-ago-nso-admitted-misuse-risk-said-secrecy-barred-it-from-gatekeeping-325154/