புதன், 21 ஜூலை, 2021

கால நிலை மாற்றம் உண்மையானது; அதிர்ச்சி ஏற்படுத்தும் ஜெர்மனியின் வெள்ளம்

 19 97 2021 

Germany Flood : சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவு காரணமாக நாட்டின் பெரும்பாலான கிராமப் புறங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. லட்சக் கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை இழந்து, மின்சாரம் அற்ற சூழலில் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல், இந்த வெள்ள நிகழ்வை மோசமான இயற்கைப் பேரழிவு என்று வர்ணித்துள்ளார்.

.

ஆயிரக்கணக்கான தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 100 கணக்கானவர்கள் இறந்திருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து ஏற்பட்ட மழைப் பொழிவு மற்றும் புயலின் காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது. அஹ்ர் (Ahr) என்ற நதியை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் மழை நீரால் மூழ்கியது. அதிகப்படியான நீரை உறிஞ்சுக்கொள்ளும் திறனை மண் முற்றிலுமாக இழந்த நிலையில், வீடுகள், கட்டிடங்கள் மற்றும் மக்களின் அனைத்து உடமைகளும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது.

Schuld என்ற கிராமம் இந்த வெள்ளத்தில் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. அதிகாரிகள் இப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதில் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

ஜெர்மனி மட்டும் இல்லாமல், பெல்ஜியம், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. 1962ம் ஆண்டு ஹாம்பர்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 300 பேர் இறந்ததிற்கு பிறகு இது நாள் வரையில் எந்த வகையான பெரும் வெள்ளமும் இந்த 60 ஆண்டுகளில் ஏற்படவில்லை என்கிறது அந்நாட்டின் செய்தி தாள் ஃப்ராங்க்ஃப்ரூடர் அல்கேமெய்ன்.

source https://tamil.indianexpress.com/viral/trending-viral-video-of-germany-flood-and-storm-324309/