திமுக ராஜ்ய சபா எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாராட்டைப் பெற்றுள்ளார். திமுக எம்.பி.வில்சன் நாடாளுமன்றத்தில் தனது செயல்பாடு குறித்த செயல்திறன் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார். அதில், வில்சன் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சட்டங்களுக்கான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் மக்களவை என்கிற லோக்சபாவிலும் மாநிலங்களை என்கிற ராஜ்ய சபாவிலும் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுபவர்களாகவும் புதிய சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களாகவும் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகவும் செயல்படுகிறார்கள். எம்.பி.க்கள். குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக தனிநபர் மசோதா கொண்டுவரலாம். ஆளும் கட்சி கொண்டு வரும் மசோதாக்கள் மீது கேள்விகளை எழுப்பலாம் இப்படி எம்.பி.க்களின் பணி நாடாளுமன்றத்தில் முக்கியமானதாக இருக்கிறது.
இந்த சூழலில்தான், திமுக எம்.பி வில்சன், நாடாளுமன்றத்தில் ராஜ்ய சபாவில் தனது 2 வருடங்களுக்கான செயல்திறன் அறிக்கையை ஜூலை 24ம் தேதி திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளார். அதில், நாடாளுமன்றத்திற்கு 97% வருகை, 3 குழுக்களில் 100% வருகை, 91 விவாதங்கள், 75 கேள்விகள், 10 சிறப்பு கவனஈர்ப்பு விவாதம் மற்றும் 3 தனிநபர் மசோதா என திமுக எம்.பி வில்சனின் செயல்திறனை மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
திமுக எம்.பி வில்சனின் செயல்திறனை மு.க.ஸ்டாலின் மட்டுமல்லா பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திமுகவில் எம்.பி வில்சன் சட்ட ரீதியான பல முக்கிய விவகாரங்களை முன்னெடுத்து செல்வதில் தமிழக அரசியல் களத்தில் கவனத்தை பெற்று வருகிறார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி ஆகஸ்ட் 7, 2018ம் ஆண்டு இறந்தபோது, அவருடைய உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, தற்போது எம்.பி.யாக உள்ள வழக்கறிஞர் வில்சன் உயர் நீதிமன்றத்தில் வாதாடி கருணாநிதி உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதி பெற்று வந்தார். அப்போது, வில்சனை பலரும் பாராட்டினார்கள். இதையடுத்து, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆனார்.
நாடாளுமன்றத்தில் லோக் சபா எம்.பி ஆனாலும் சரி, ராஜ்ய சபா எம்.பி ஆனாலும் சரி சிலர் நாடாளுமன்றத்தில் அவை நடைபெறும் எல்லா நாட்களும் பங்கேற்பதில்லை. பெரிய அளவில் விவாதங்களிலும் பங்கேற்பதில்லை. ஆனால், சில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அவை நடைபெறும் நாட்களில் தவறாமல் வருகைப் பதிவு செய்வதோடு, விவாதங்களிலும் பங்கேற்பார்கள். அந்த வரிசையில், திமுக எம்.பி வில்சன், கடந்த 2 வருடங்களில் நாடாளுமன்றத்தில் 97% வருகை, 3 குழுக்களில் 100% வருகை, 91 விவாதங்கள், 75 நாடாளுமன்றத்தில் கேள்விகள், 10 சிறப்பு கவனஈர்ப்பு விவாதம் மற்றும் நீட் தேர்வு விவகாரம் உள்பட 3 தனிநபர் மசோதாக்கள் என சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
திமுக எம்.பி வில்சன் கடந்த 2 வருடங்களில் நாடாளுமன்றத்தில் தனது செயல் திறன் பற்றி மு.க.ஸ்டாலினிடம் செயல்திறன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இது குறித்து வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், பாராளுமன்றத்தில் எனது 2 வருடங்களுக்கான செயல்திறன் அறிக்கையை இன்று தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தேன்: 97% வருகை, 3 குழுக்களில் 100% வருகை, 91 விவாதங்கள், 75 நாடாளுமன்றத்தில் கேள்விகள், 10 சிறப்பு கவனஈர்ப்பு விவாதம் மற்றும் 3 தனிநபர் மசோதா #NEET ரத்து உள்பட.” என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
25 07 2021
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-praise-dmk-mp-wilson-for-his-good-performance-in-rajya-sabha-326133/