இந்திய தபால் ஆணையமானது, தபால் உதவியாளர் (Postal Assistant / Sorting Assistant) மற்றும் உதவியாளர் (Multitasking Staff) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 57 காலியிடங்கள் நிரப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் தபால் அலுவலக காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தபால் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/ என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.
Postal Assistant தபால் உதவியாளர் பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள்: 45
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 – 27 வயதுக்குள்
முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021
சம்பளம்: ரூ.18,000-81,000
Multitasking Staff உதவியாளர் பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள்: 09
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 18 – 25 வயதுக்குள்
முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021
சம்பளம்: ரூ. 18,000- 56,900
Sorting Assistant வகைப்படுத்தல் உதவியாளர் பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயதுத் தகுதி : 18 – 27 வயதுக்குள்
முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021
சம்பளம்: ரூ. 25,500 முதல் 81,100
இந்த பணியிடங்கள் பெரும்பாலும் விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்படவுள்ளது. தகுதியானவர்கள் கடைசித் தேதிக்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளவும்.
இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களைத் தொடர்ந்து பெற இந்த தளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/post-office-recruitment-2021-postal-assistant-multitasking-staff-vacancies-323815/