Pranav Mukul , Anil Sasi
Cost of putting Pegasus in phones runs into crores : மொபைல் போன்களில் பெகாசஸ் ஸ்பைவேரை இன்ஸ்டால் செய்து உளவு பார்க்க ஆகும் விலையானது இமாலய அளவில் உள்ளது. 2016 ஆம் ஆண்டில் தி நியூயார்க் டைம்ஸ் கையகப்படுத்திய என்எஸ்ஓ குழுமத்தின் வணிகத் திட்டத்தின் ஆவணங்களின் அடிப்படையிலான மதிப்பீடுகளின் படி, 5 லட்சம் டாலர்கள் இன்ஸ்டலேசனுக்கும், 10 ஐபோன்கள் அல்லது ஆண்ட்ராய்டு போன்களை கண்காணிக்க 6.5 லட்சம் டாலர்களும், 5 ப்ளாக்பெரி பயனர்களை கண்காணிக்க 5 லட்சம் டாலர்களும், 5 சிம்பியன் பயனர்களை கண்காணிக்க 3 லட்சம் டாலர்களும் இஸ்ரேலிய ஸ்பைவேர் தயாரிப்பாளர்கள் பாரம்பரிய மென்பொருள் நிறுவனங்களின் மதிப்பீட்டில் விலை நிர்ணயம் செய்துள்ளனர் என்று கூறியது.
அறிக்கையின் படி, 100 பேர் வரையிலான இலக்குகளுக்கு கூடுதல் கண்காணிப்பிற்காக 8 லட்சம் அமெரிக்க டாலர்கள், 50 நபர்களுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 20 நபர்களுக்கு 1.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப உத்தரவுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மொத்த செலவில் 17 சதவீதத்தை வருடாந்திர கணினி பராமரிப்பு கட்டணமாக என்எஸ்ஓ வசூலித்தது. ஆரம்ப கால கட்டணங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான். புதுப்பிக்கும் போது கூடுதல் கட்டணங்கள் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு வசூலிக்கப்படும்.
இந்தியாவில் 300 நபர்களின் செல்போன் எண்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது என்றால், 2016ம் ஆண்டுக்கு முந்தைய விலைப்பட்டியல் படி பார்த்தால், இந்த 300 இலக்குகளையும் கண்காணிப்பது ஒரு ஏஜென்சி தான் காரணம் என்று கருதினால், ஒரு இன்ஸ்டலேசனுக்கு 5 லட்சம் டாலர்கள் என்ற கணக்கீட்டின் படி, முதல் 10 ஐபோனக்ள் அல்லது ஆண்ட்ராய்ட் போன்களில் இன்ஸ்டலேஷன் கட்டணம் மட்டும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். இதர இலக்குகளை உளவு பார்க்க 2.25 மில்லியன் டாலர்களும் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். மொத்தமாக பார்க்கும் போது, வருடாந்திர பராமரிப்பு செலவு இல்லாமல், 4.05 மில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 30,21,61,995 ஆகும்) ஆக இருந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 17% பராமரிப்பு கட்டணத்தைச் சேர்ப்பதன் மூலம் (வருடாந்திர செலவு அதிகரிப்பு இல்லாமல்), 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் 7.5 மில்லியன் டாலர் வரை இதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த விலையானது பெகாசஸ் ஸ்பைவேருக்கான விலை என்று உறுதிப்படுத்த இயலவில்லை. இது என்.எஸ்.ஓ நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகளில் ஒன்றாகும். மேலும் ஒட்டுமொத்தமாக, ஆரம்ப கால விலைப்பட்டியல் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படும் பட்சத்தில் இதற்கான செலவு 56 கோடி வரை இருக்கலாம். மேலும் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பது போன்றவற்றின் செலவுகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் இது வருடாந்திர செலவு அதிகரிப்பும், சேவை கட்டளைக்கான பிரீமியமும் இடம் பெறவில்லை.
குற்றவியல் மற்றும் பயங்கரவாத செயல்களைத் தடுக்கும்” நோக்கத்திற்காக அதன் தொழில்நுட்பங்களை அரசாங்கங்களின் சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே வழங்குகிறோம் என்று என்.எஸ்.ஒ. தன்னுடைய நிலைப்பாட்டை தொடர்ந்து அறிவித்து வருகிறது.
பெஞ்ச்மார்க் ஸ்பைவேர் விகிதங்களுக்கான சிறந்த மார்க்கர் மற்றொரு இஸ்ரேலிய இலாப நோக்கற்ற ஸ்பைவேர் கருவி தயாரிப்பாளரான காண்டிரு (Candiru) நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மென்பொருள் உளவு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. என்.எஸ்.ஒ போன்றே இதன் விலைப்பட்டியல் உள்ளது. ஆனால் ஆனால் மிக அதிகமாக நிறுவல் கட்டணத்தை நிர்ணயம் செய்து வாடிக்கையாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவினங்களை அதிகரிக்கிறது.
காண்டிருவின் நிறுவல் கட்டணம் (installation fee) என்பது 28 மில்லியன் அமெரிக்க டாலர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது என்.எஸ்.ஓ. குழுமத்தின் விலைப்பட்டியலைக் காட்டிலும் 60 மடங்கு அதிகமாகும். காண்டிருவின் நிறுவல் கட்டணத்தில் 10 இலக்குகளின் கண்காணிப்புகளும் அடங்கும். இது என்.எஸ்.ஒ விலைப்பட்டியலில் 1.15 மில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. , இது காண்டிருவின் மிக சமீபத்திய விலை மாதிரி 2016ம் ஆண்டுக்கான என்எஸ்ஓ விலைகளை விட கிட்டத்தட்ட 25 மடங்கு விலை உயர்ந்ததாக ஆக்குகிறது. இது என்எஸ்ஓவின் சமீபத்திய விலைகளை நிர்ணயிக்கும் காரணியாக கூட இருக்கலாம். இந்த ஒப்பீடானது, 7.5 மில்லியன் டாலரை 187.5 மில்லியனாக அதிகரிக்கிறது. இந்திய விலை மதிப்பில் இதன் விலை 1,401 கோடி ரூபாய் ஆகும்.
பிரெஞ்சு ஊடக உரிமை அமைப்பான ஃபோர்பிடன் ஸ்டோரீஸ் தலைமையிலான தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும் தி கார்டியன் “தரவுத்தளத்தில் ஒரு தொலைபேசி எண் இருப்பது தொடர்புடைய சாதனம் பெகாசஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது முயற்சித்த ஹேக்கிற்கு உட்பட்டதா என்பதை உறுதிப்படுத்தாது என்று கூறியுள்ளது. NSO இன் அரசாங்க வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான இலக்குகளை சாத்தியமான கண்காணிப்பு முயற்சிகளுக்கு முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டதையே இந்த தரவு குறிப்பதாக கூட்டமைப்பு நம்புகிறது.
தி வையர் வெளியிட்டுள்ள செய்திகளில், உளவு பார்க்கப்பட்டதாக சந்தேகப்படும் 67 ஸ்மார்ட்போன்களில் ஆய்வு நடத்திய ஆம்னாஸ்ட்டியின் செக்யூரிட்டி லேப், வெற்றி கரமாக 23 போன்களில் உளவு பார்க்கப்பட்டதாகவும், 14 போன்களில் உளவு பார்க்க முயற்சிகள் நடந்திருப்பதையும், மீதம் உள்ள 30 போன்களில் முடிவு எட்டப்படவில்லை என்று கூறியதாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம், பயனர்கள் தங்களின் போன்களை மாற்றியிருக்கலாம் என்றும், 15 போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் இயங்குகிறது என்றும், அதில் உளவு நடைபெற்றது என்பதை நிரூபிக்கும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
செயல்பாடுகள் குறைந்த அளவில் இருக்கின்ற போதிலும், காண்டிருவின் செயல்பாடுகள் NSO குழுமத்தின் பணிகளுடன் பரவலாக ஒப்பிடத்தக்கவை. இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, பிசி கணினிகள், நெட்வொர்க்குகள், மொபைல் கைபேசிகளில் எக்ஸ்ப்ளோஷன் மற்றும் பரப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தி உளவு பார்க்க அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உயர்நிலை இணைய புலனாய்வு தளத்தை வழங்குகிறது.
ஹாரெட்ஸின் சகோதரி வெளியீடான தி மார்க்கரால் பெறப்பட்ட கசிந்த வணிக முன்மொழிவு ஆவணத்தின்படி, அடிப்படை கணினி மென்பொருள் உரிமத்திற்கு 23.5 மில்லியன் யூரோக்களை கட்டணமாக வசூலிக்கிறது (6.65 மில்லியன் யூரோக்களை சிறப்பு சலுகையாக அறிவித்த பிறகு). இது உரிம கட்டணம் ( 3 ஆப்பரேட்டர் ஒர்க்ஸ்டேஷன் உரிமங்கள்) ஆகியவற்றை சேர்த்தது. விண்டோஸ், iOS மற்றும் Android சாதனங்களுக்கான மென்பொருள் தொகுதிகள், தொற்று திசையன்கள் (ஹைப்பர்லிங்க்கள், ஆயுதமயமாக்கப்பட்ட கோப்புகள் போன்றவை), கணினி வன்பொருள் மற்றும் தொழில்முறை மற்றும் பயிற்சி சேவைகள் ஆகியவையும் இந்த கட்டணத்தில் அடங்கும்.
இந்த ஆரம்ப கட்டணம் இறுதி பயனரின் நாட்டில் அமைந்துள்ள 10 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்க வசூலிக்கப்படும் கட்டணமாகும். கூடுதலாக மற்றொரு நாட்டில் 15 இலக்குகளை கண்காணிக்க ஆரம்ப கட்டணத்திற்கு மேல் 1.5 மில்லியன் யூரோக்கள் வழங்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நாடுகளில் 25 நபர்களை கண்காணிக்க 5.5 மில்லியன் யூரோக்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விற்பனை பிரிவின் துணைத் தலைவர் கையொப்பமிட்ட காண்டிருவின் வணிக முன்மொழிவில், வாடிக்கையாளர் 50% கட்டணத்தை முன்பணமாக செலுத்த வேண்டும், அதே நேரத்தில் 40% கட்டணத்தை எண்ட்-யூசர் டெர்மினலுக்கு செயலியை டெலிவரி செய்யும் போதும் மீதம் உள்ள 10% கட்டணத்தை பயிற்சி தொகுதிக்குப் பிறகு வழங்க வேண்டும்.
தாக்குதல் இணைய சேவைகள் இஸ்ரேலில் மிக அதிக அளவில் வருமானத்தை ஈட்டும் தொழிலாகும். ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்கள் வரை இந்த தொழிற்துறை வருமானம் ஈட்டுகிறது என்று ஹார்டெஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில் நிறுவனங்களில் என்.எஸ்.ஒ. மிகப்பெரிய நிறுவனமாகும். கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 240 மில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. 2013ம் ஆண்டு இதன் வருமானம் 30 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/india/cost-of-putting-pegasus-in-phones-runs-into-crores-324806/