வெள்ளி, 30 ஜூலை, 2021

மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறதா ஓ.பி.சி. இட ஒதுக்கீடு?

 Govt quota move part of OBC : உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கை அதன் சமூக நீதி அரசியலை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை சென்றடைய மோடி அரசு எடுத்துக் கொண்ட இரண்டு மிக முக்கியமான நடவடிக்கைகளுக்கு அடுத்தது என்று கருதப்படுகிறது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் ஆதரவு தளம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடி அரசின் சமீபத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், ஓ.பி.சி. பிரதிநிதிகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. மேலும் அதில் 5 நபர்கள் கேபினட் அமைச்சர்களாக உள்ளனர். மேலும், மராட்டிய இடஒதுக்கீடு தீர்ப்பில் அரசியலமைப்பின் 102 வது திருத்தத்தின் நீதிமன்றத்தின் விளக்கத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை அடையாளம் கண்டு அறிவிக்க மாநிலங்களின் அதிகாரத்தை அது அகற்றியது.

மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வர்க்கங்களை அடையாளம் காண மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்கக் கோரும் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன – இது ஓபிசி சமூகத்தின் பிரதிநிதிகள் கோரிய மிக முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

கடந்த காலங்களில் தேர்தல் வெற்றிகளுக்காக இதர பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு தளத்தை அதிகம் நம்பி இருந்தது பாஜக. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில், நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடனான கூட்டணியில் அந்த ஆதரவு தளத்தை பாஜக பெறமுடியாமல் திணறியது. இது அவர்களை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பின் தங்கியவர்களின் ஆதரவை கணிசமாக பெற்றுள்ளது என்பதை குறிக்கிறது. ஆனால் வருகின்ற உத்திரப்பிரதேச தேர்தலில், ஓ.பி.சி. ஆதரவு தளம் அப்படியே நீடிப்பதை பாஜக உறுதி செய்ய விரும்புகிறது. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் பலவீனம் அடைந்து வருகின்ற நிலையில் சமாஜ்வாடி கட்சி ஓபிசி வாக்குகளில் ஒரு பகுதியை கைப்பற்றி சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்று பிஜேபி வியூகம் வகுத்து வருகிறது.

2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தும், பின்னர் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகும் கூட, பாஜக போதுமான அதிகாரங்களையும் பதவிகளையும் ஓ.பி.சி. பிரதிநிதிகளுக்கு வழங்கவில்லை என்று கட்சி தலைவர்கள் பலர் ஒப்புக் கொண்டனர். ஆனாலும், சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு அந்த அச்சங்களை குறைத்துள்ளது என்று மூத்த கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் முடிவானது, பாஜக மற்றும் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள ஓ.பி.சி. பிரதிநிதிக்கள்மோடியை சந்தித்து, மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அனைத்திந்திய கோட்டாவில் இடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஒரு நாள் ஆன நிலையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் முக்கியமான முடிவு என்று பாஜக எம்.பி. கனேஷ் சிங் கூறினார். வேலைகளில் OBC களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இருந்தபோதிலும், பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறவில்லை. ஓபிசி சமூகங்களிலிருந்து ஏராளமான புகார்கள் வந்துள்ளன, நிலைமை சற்று மோசமாகி வருகிறது. பாஜக ஒரு கட்சியாக அது அநீதியாக உணரத் தொடங்கியது, அது நியாயமில்லை என்று பிரதமர் மோடிஜியும் ஒப்புக்கொண்டார் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓ.பி.சிக்காக அதிகம் உழைத்த கட்சி என்றால் அது பாஜக தான். மண்டேல் ஆணையத்திற்கு பிறகு இந்த பிரிவில் எதுவும் அதிகம் ந்நடைபெறவில்லை. ஆனால் இந்த அரசாங்கம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது, ”என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/govt-quota-move-part-of-obc-outreach-ahead-of-key-state-polls-327504/