07/07/2021 அன்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவை பட்டியலில் முக்கிய நபர்கள் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. வயது மூப்பு மற்றும் சில அரசியல் காரணங்களுக்காக 12 பேர் தங்களின் அமைச்சரவை பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளனர். நேற்று மாலை 43 நபர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கேபினட் அமைச்சர்கள்
வ.எண் | அமைச்சர் பெயர் | பதவி /துறை |
01 | ராஜ்நாத் சிங் | பாதுகாப்புத்துறை |
02 | அமித் ஷா | உள்த்துறை மற்றும் கூட்டுறவுத்துறை |
03 | நிதின் ஜெய்ராம் கட்கரி | மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை |
04 | நிர்மலா சீதாராமன் | நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை |
05 | நரேந்திர சிங் தோமர் | வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை |
06 | சுப்பிரமணியம் ஜெய்சங்கர் | வெளியுறவுத்துறை |
07 | அர்ஜூன் முண்டா | பழங்குடிகள் விவகாரங்கள் துறை |
08 | ஸ்மிருதி ஜூபின் இரானி | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை |
09 | பியூஷ் கோயல் | காமர்ஸ் மற்றும் தொழிற்துறை, உணவு மற்றும் பொதுவிநியோகம் |
10 | தர்மேந்திர பிரதான் | கல்வித்துறை அமைச்சர் |
11 | பிரல்ஹாத் ஜோஷி | பாராளுமன்ற விவகாரம், சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை |
12 | நாராயண் தட்டு ரானே | சிறு குறு வணிக துறை |
13 | சர்பானந்த சோனோவால் | துறைமுகம் கப்பல் போக்குவரத்து, நீர்வழிவ் போக்குவரத்து, ஆயூஷ் துறை |
14 | முக்தர் அப்பாஸ் நக்வி | சிறுபான்மையினர் நலத்துறை |
15 | விரேந்தர் குமார் | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் |
16 | கிரிராஜ் சிங் | ஊரக மேம்பாட்டு துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் |
17 | ஜோதிராதித்ய சிந்தியா | விமானப் போக்குவரத்து |
18 | ராமச்சந்திர பிரசாத் சிங் | எஃகு துறை |
19 | அஸ்வினி வைஷ்ணவ் | ரயில்வே துறை, தொலைத்தொடர்பு துறை, மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை |
20 | பசுபதி குமார் பராஸ் | உணவு பதப்படுத்துதல் |
21 | கஜேந்திர சிங் செகாவத் | ஜல்சக்தி |
22 | கிரேன் ரிஜ்ஜூ | சட்டம் மற்றும் நீதி |
23 | ராஜ்குமார் சிங் | மின்சக்தி, நிலக்கரி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை |
24 | ஹர்தீப் சிங் பூரி | பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு; நகர்புற வீட்டுவசதி துறை |
25 | மன்சுக் மாண்டவியா | சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்; சாயனம் மற்றும் உரங்கள் |
26 | பூபேந்திர யாதவ் | சுற்றுச்சூழல் காடு, காலநிலை மாறுபாடு துறை மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை |
27 | மகேந்திர நாத் பாண்டே | கனரக தொழிற்துறை |
28 | பர்ஷோத்தம் ரூபாலா | மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை |
29 | கிஷான் ரெட்டி | கலாச்சாரம், சுற்றுலா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் |
30 | அனுராக் சிங் தாக்கூர் | தகவல்தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு துறை, இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை |
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட 43 அமைச்சர்களில் 8 பேர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு உ.பி., உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குஜராத்தில் இருந்து 6 உறுப்பினர்கள், மே.வங்கத்தில் இருந்து 4 பேர், மகாராஷ்ட்ராவில் இருந்து 4 பேர், பீஹாரில் இருந்து 3 நபர்கள், கர்நாடகாவில் இருந்து மூன்று நபர்கள், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து தலா 2 நபர்களும், தமிழகம், அசாம், ஹிமாச்சல் பிரதேசம், தெலுங்கானா, மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான், திரிபுரா, உத்திரகாண்ட், ஜார்கண்ட், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு
வ. எண் | அமைச்சர் பெயர் | துறை |
01 | ராவ் இந்திரஜித் சிங் | மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சகம் (தனிப் பொறுப்பு) , திட்டத்துறை இணை அமைச்சகம் (தனிப் பொறுப்பு) கார்ப்பரேட் விவகார இணை அமைச்சகம் |
02 | டாக்டர் ஜித்தேந்திர சிங் | அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு இணை அமைச்சகம் (தனிப் பொறுப்பு), புவி அறிவியல் அமைச்சகம் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலக இணை அமைச்சர், விண்வெளித்துறை, அணுசக்தி, பணியாளர்கள் நலன், பொதுமக்கள் குறை மற்றும் ஓய்வூதிய இணை அமைச்சகம் |
பிரதமர் வாழ்த்து
புதிய அமைச்சர்கள் பதவியேற்றவுடன், புதிதாக பதவியேற்ற உடன் பணியாற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து உழைத்து வலிமையான செழுமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மோடி ட்வீட் செய்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
இணை அமைச்சர்கள் பட்டியல்
வ. எண் | அமைச்சர் பெயர் | துறை |
01 | ஸ்ரீபத் யெஸ்ஸொ நாய்க் | துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை, சுற்றுலாத்துறை இணை அமைச்சகம் |
02 | ஃபாகன்சிங் குலாஸ்தே (Faggansingh Kulaste) | எஃகு, ஊரக மேம்பாட்டு துறை இணை அமைச்சகம் |
03 | ப்ரஹலாத் சிங் படேல் | ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சகம் |
04 | அஸ்வினி குமார் சௌபேய் | நுகர்வோர் விவகாரம் இணை அமைச்சகம் , உணவு மற்றும் பொதுவிநியோகம் இணை அமைச்சகம் , சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றம் இணை அமைச்சகம் |
05 | அர்ஜூன் ராம் மெக்வால் | பாராளுமன்ற விவகாரம் இணை அமைச்சகம் , கலாச்சாரம் இணை அமைச்சகம் |
06 | ஓய்வு பெற்ற ஜெனரல் வி.கே. சிங் | சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை இணை அமைச்சகம், விமான போக்குவரத்துறை இணை அமைச்சகம் |
07 | க்ரிஷன் பால் | மின்சக்தி இணை அமைச்சகம், கனரக தொழிற்துறை இணை அமைச்சகம் |
08 | தான்வே ராவ்ஷாஹிப் தாதாராவ் | ரயில்வே இணை அமைச்சகம் , நிலக்கரி இணை அமைச்சகம், சுரங்கத்துறை இணை அமைச்சகம் |
09 | ராம்தாஸ் அத்வாலே | சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் இணை அமைச்சகம் |
10 | நிரஞ்சன் ஜோதி | ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சகம் |
11 | சஞ்சீவ் குமார் பல்யான் | மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சகம் |
12 | நித்யானந்த் ராய் | உள்துறை இணை அமைச்சகம் |
13 | பங்கஜ் சௌத்ரி | நிதித்துறை இணை அமைச்சகம் |
14 | அனுப்ரியா சிங் படேல் | வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சகம் |
15 | எஸ்.பி. சிங் பாகெல் | சட்டம் மற்றும் நீதி இணை அமைச்சகம் |
16 | ராஜீவ் சந்திரசேகர் | திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணை அமைச்சகம்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சகம் |
17 | சோபா கரன்ந்லாஜே (Shobha Karandlaje) | வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சகம் |
18 | பானு ப்ரதாப் சிங் வெர்மா | சிறு குறு தொழில் இணை அமைச்சகம் |
19 | தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் | ஜவுளித்துறை, ரயில்வேதுறை இணை அமைச்சகம் |
20 | முரளிதரன் | வெளியுறவுத்துறை இணை அமைச்சகம் , பாராளுமன்ற விவகாரம் இணை அமைச்சகம் |
21 | மீனாட்சி லேகி | வெளியுறவுத்துறை இணை அமைச்சகம், கலாச்சாரம் இணை அமைச்சகம் |
22 | சோம் பிரகாஷ் | வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சகம் |
23 | ரேணுகா சிங் சருதா | பழங்குடிகள் விவகார இணை அமைச்சகம் |
24 | ராமேஸ்வர் தெலி | பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சகம் |
25 | கைலாஷ் சௌத்ரி | வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் இணை அமைச்சகம் |
26 | அன்னபூர்ணா தேவி | கல்வித்துறை இணை அமைச்சகம் |
27 | நாராயணசாமி | சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சகம் |
28 | கௌஷல் கிஷோர் | வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி இணை அமைச்சகம் |
29 | அஜய் பாத் | பாதுகாப்புதுறை இணை அமைச்சகம், சுற்றுலாத்துறை இணை அமைச்சகம் |
30 | பி.எல். வெர்மா | வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை இணை அமைச்சகம், கூட்டுறவுத்துறை இணை அமைச்சகம் |
31 | அஜய் குமார் | உள்துறை இணை அமைச்சகம் |
32 | தேவுஷின் சௌஹான் | தொலைத்தொடர்பு இணை அமைச்சகம் |
33 | பக்வந்த் குபா | புதிய மற்றும் புதுப்பிக்க கூடிய எரிசக்தி துறை இணை அமைச்சகம், ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சகம் |
34 | கபில் மோரேஷ்வர் பாட்டில் | பஞ்சாயத் ராஜ் இணை அமைச்சகம் |
35 | ப்ரமிதா பௌமிக் | சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் இணை அமைச்சகம் |
36 | டாக்டர். சுபா சர்கார் | கல்வித்துறை இணை அமைச்சகம் |
37 | டாக்டர். பக்வத் கிஷன்ராவ் காரத் | நிதித்துறை இணை அமைச்சகம் |
38 | டாக்டர். ராஜ்குமார் ரஞ்சன் சிங் | வெளியுறவுத்துறை இணை அமைச்சகம், கல்வித்துறை இணை அமைச்சகம் |
39 | டாக்டர். பாரதி ப்ரவின் பவார் | சுகாதாரம் மற்றும் குடும்பநல இணை அமைச்சகம் |
40 | பிஷ்வேஸ்வர் துடு | பழங்குடிகள் விவகாரம் இணை அமைச்சகம், ஜல் சக்தி இணை அமைச்சகம் |
41 | ஷாந்தனு தாக்கூர் | துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை இணை அமைச்சகம் |
42 | -டாக்டர் முஞ்சப்பாரா மஹேந்திரபாய் | மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சகம், ஆயுஷ் இணை அமைச்சகம் |
43 | ஜான் பார்லா | சிறுபான்மையினர் விவகாரம் இணை அமைச்சகம் |
44 | டாக்டர் எல். முருகன் | மீன்வளத்துறை, கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சகம் |
45 | நிதிஷ் ப்ரமானிக் | உள்துறை இணை அமைச்சகம், இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சகம் |
12 அமைச்சர்கள் பதவி விலக 36 புதுமுகங்கள் அமைச்சரவையை அலங்கரித்துள்ளது. பிரதமர் உட்பட மொத்தம் 78 அமைச்சர்கள் இந்தியாவின் கவுன்சில் அமைச்சர்களாக உள்ளனர். இது உச்சவரம்பான 81-ற்கு சற்று குறைவானது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த ஹர்ஷ் வர்தன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். அவரைப் போன்றே சந்தோஷ் கங்குவார், ரமேஷ் பொக்ரியால், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இணை அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ஆகியோரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.
source https://tamil.indianexpress.com/india/union-cabinet-expansion-list-of-new-ministers-name-321189/