நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையல் தமிழ்நாட்டில் இன்று புதிதாக 600க்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது 4 மாதங்களுக்கு பின்னர் இந்த தொற்று பாதிப்பானது 13,000ஐ கடந்துள்ளது. நேற்றைய நிலவரத்தை பொறுத்த அளவில், 12,781 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.
இதனால் மொத்த பாதிப்பானது 4.33 கோடியாக அதகரித்துள்ளது. தற்போது 72,700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகப்பட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 23,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல மொத்த உயிரிழப்பு 5,24,873 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
source https://news7tamil.live/todays-covid-situation-in-tamil-nadu.html