திங்கள், 27 ஜூன், 2022

கேள்விக்குறியாகிறதா 18 லட்சம் மாணக்கர்களின் வாழ்க்கை ?

 கடந்த கல்வி ஆண்டான 2020- 2021 கொரோனா காலம் என்பதால் கடந்த அதிமுக அரசு இருந்தபோது 10 ஆம் வகுப்பு  மற்றும் 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது அனைவரும் பாஸ் என அறிவித்தனர்  ஆனால் அவர்களுக்கு எந்தவித மதிப்பெண்களும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமோ என்ற அச்சம் மாணக்கர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுதேவையற்ற அச்சம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

பத்தாம் வகுப்பில் சுமார்  9 லட்சம் மாணவர்களும் பதினொன்ராம் வகுப்பில் சுமார் 9 லட்சம் மாணவர்களும் ஆக மொத்தம் 18 லட்சம் மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லாமல் பாஸ் என  மட்டுமே மதிப்பெண் சான்றிதழ் உள்ளது. இதனால் அரசுத்துறை போட்டி தேர்வுகள் எழுதும்போது தங்களது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது, மாணக்கர்கள் எழுதிய காலாண்டு  பரீட்சை , அரையாண்டு பரீட்சை அல்லது அவர்கள் எழுதிய  ஏதாவது ஒரு இரு தேர்வை கூட்டி அதிலிருந்து  சராசரி மதிப்பெண் போட்டு இருக்கலாம்.  ஆனால் அனைவருக்கும் அனைத்து பாடங்களிலும் பாஸ் என்று மட்டுமே வந்துள்ளது. இதனால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் மாணக்கர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுகுறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் கேட்டபோது, இந்த பிரச்சனையை கண்டு பெற்றோர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. பேரிடர் காலத்தில் வேறு வழியின்றி அரசு இவ்விதமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக அரசு சிறப்பு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என்றார். அரசுத் தேர்வுகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலமே தேர்ந்தெடுக்கபடுவர் என்பதால் இந்த மதிப்பெண் தேவைப்படாது. அதுவும் பேரிடர் காலத்தில் பயின்ற எந்த மாணக்கர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படவில்லை என்பதால் இதுபோன்ற பிரச்சனை எங்குமே எழாது. மாணக்கர்களும், பெற்றோர்களும் இதற்காக எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனக்கூறினார்.

இராமானுஜம்.கி


source https://news7tamil.live/what-happend-to-corona-batch-students-life.html