26 6 2022
அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று காரணமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், 1,382 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,6,872ஆக அதிகரித்துள்ளது. புதிதாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாக இல்லை. இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,22,169ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-ம.பவித்ரா
source https://news7tamil.live/rising-corona-infection-cuddalore-government-hospital-prepares-100-beds.html