பணமோசடி வழக்குகளில் தொடர்புடைய நிர்வாகியை, தமிழக பாஜக கட்சியின் மாநில பொறுப்புக்கு பதவி உயர்த்தி நியமித்துத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெபாசிட்தாரர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் பாஜக நிர்வாகி கே ஹரிஷ் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. கடந்த மே மாத இறுதியில், பல கோடி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்த தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்களில் ஹரீஷ்-ம் ஒருவர்.
இந்தநிலையில், ஹரீஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு பா.ஜ.க அவரை கட்சியின் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமித்துள்ளது.
விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் எஸ் அமர் பிரசாத் ரெட்டி ஜூன் 2 ஆம் தேதி ஹரிஷின் நியமனம் குறித்து மற்ற சில நிர்வாகிகளுடன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதற்கிடையில், மே 24 முதல் தலைமறைவாக உள்ள ஹரிஷ் மற்றும் மேலும் மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
ஹரீஷ் மீதான வழக்கு குறித்து கேட்டப்போது, அமர் பிரசாத் ரெட்டி அவர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார். மற்றும் விளையாட்டு வீரர்களை அணிதிரட்டி வருகிறார். இதனால் இந்த வழக்கு “அரசியல் பழிவாங்கல்” என்று குறிப்பிட்டார். மேலும், ஹரிஷை எங்களால் அணுக முடியவில்லை. கட்சி பதவியை அவர் இதுவரை ஏற்கவில்லை, ஹரிஷ் விளக்கம் அளித்த பிறகு பா.ஜ.க உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமர் பிரசாத் ரெட்டி கூறினார்.
மேலும், “ஹரிஷ் ஒரு விளையாட்டு வீரர், அவர் நீண்ட காலத்திற்கு முன்பே கட்சியில் சேர்ந்துள்ளார். ஹரிஷின் வியாபாரத்தின் தன்மை எங்களுக்குத் தெரியாது. அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் மற்றும் விளையாட்டு ஆளுமை என்ற நற்பெயரின் அடிப்படையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஹரிஷ் மாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பான தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார். அவருக்கு மாநில செயலாளர் பொறுப்பை வழங்க நாங்கள் அதை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொண்டோம்,” என்றும் அமர் பிரசாத் ரெட்டி கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-bjp-appoints-scam-accused-as-state-position-469926/