20 06 2022
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை வெளியிட்டார்.
தேர்வு எழுதிய மாணவர்கபள் தங்களது தேர்வு முடிவுகளwww.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும், பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 9.12 லட்சம் மாணவர்களில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93. 76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதில்
தொடர்ந்து மாணவர்கள் ஜூன் 24 ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும், விருதுநகர் மாவட்டம் 2-வது இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில். வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பெற்றுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வணிகவியல் பாடத்தில் 4,634 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல் கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,540 மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில் 3,827 மாணவர்ளும் 100/100 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-10th-and-12-result-education-minister-anbil-magesh-release-468951/