சனி, 25 ஜூன், 2022

10, 12-ம் வகுப்பு தற்காலிக சான்றிதழ்: டவுன்லோட் செய்வது எப்படி?

 

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் தற்காலிகமான மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூன் 24) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

தமிழகத்தில் 10- மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

மாணவர்களின் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து கல்லுரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு வசதியாக வரும் ஜூன் 24-ந் தேதி முதல் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று (ஜுன் 24) மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/education-jobs/how-to-download-10th-and-12th-provisional-mark-sheet-online-470547/