24 6 2022
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவலாக அதிகரித்திருப்பது புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 17,336 புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நேற்று முன்தினம் பதிவான பாதப்பை காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல 13 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,954.
தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையானது 88,284 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் இந்த எண்ணிக்கை 4,294 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் முதல் 5 மாநிலங்களாக மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஹரியான உள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,600 நபர்களுக்கு தோற்று பாதித்துள்ளது. 92% நபர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 8% பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பரவலாக கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், திரிபு வைரஸ்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய தொடர்ந்து மரபணு சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
source https://news7tamil.live/indias-daily-covid-cases-at-four-month-high.html