20 6 2022 கரூர் மாவட்ட நீதித்துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கரூர் மாவட்ட நீதித்துறையில், தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
சுருக்கெழுத்துத் தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப கல்வித் தகுதி : 1) தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை (அல்லது) 2) தமிழ் தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் இளநிலை (அல்லது) 3) தமிழ் தட்டச்சு தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் முதுநிலை மற்றும்
1) தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்துத் தேர்வில் முதுநிலை (அல்லது) 2) தமிழ் சுருக்கெழுத்துத் தேர்வில் முதுநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்துத் தேர்வில் இளநிலை (அல்லது) 3) தமிழ் சுருக்கெழுத்துத் தேர்வில் இளநிலை மற்றும் ஆங்கில சுருக்கெழுத்துத் தேர்வில் முதுநிலை
சம்பளம்: ரூ.20,600 – 65,500
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், தாந்தோன்றிமலை, கரூர் – 639007.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20No.1-2022%20for%20the%20post%20of%20Steno%20Typist%20Grade%20III%20Tamil_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/karur-court-invites-application-for-steno-typist-jobs-apply-soon-468706/