வியாழன், 23 ஜூன், 2022

அசாமில் வெள்ளத்தால் தவித்து வரும் 55லட்சம் மக்கள்!

 22 6 2022 


அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் 55 லட்சதுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 34
மாவட்டங்களில் ஏறத்தாழ 5000 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நேற்றைய தினம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் அளவு அதிகரித்துள்ளதால் புதிதாக இன்னும் பல நூறு கிராமங்களும் வெள்ளத்தில்
மூழுகியுள்ளதாக இன்று தகவல் வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 55 லட்சமாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் மழையாலும் வெள்ளத்தாலும் இதுவரை இதுவரை 89 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகூன் பகுதிகளுக்கு ரயில் மூலமாக பயணம் செய்து நேரில் சென்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ்  நிலவரங்களை ஆராய்ந்தார்  . இந்த பகுதியில் மட்டும் 4 லட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர், “ கவுஹாதியில் இருந்து ரயில் மூலமாகவே சென்றதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிக அருகில் கூர்ந்து பார்க்கமுடிந்தது. இதனைத்தொடர்ந்து வெள்ளத்திலிருந்து மக்களை மீட்கவும், நிவாரணங்களை வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்


source https://news7tamil.live/asam-flood-55-lakh-people-afftected.html