24 06 2022
மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுப் பிரிவு – 31%, எஸ்டி – 1%, எஸ்சி – 18% (SCA இருப்பின் அவர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு ), எம்பிசி – 20%, பிசிஎம் – 3.5%, பிசி – 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இதில் அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும்.
மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்தவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மணிகண்டன்
source https://news7tamil.live/compulsory-reservation-in-private-matriculation-schools-as-well.html