பொதுவாக தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக இருந்து வருகிறது. இந்த விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும் போது, மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது. பங்குகளில் முதலீடு செய்யும் நம்பிக்கை இல்லாதபோது தங்க முதலீடுகள் நன்றாகச் செயல்படுகின்றன. இதற்கு வரலாற்று ரீதியாக சாட்சியும் உள்ளது. இதை அறிந்த மக்கள் தங்கத்தில் தாராளமாக முதலீடு செய்து வருகிறார்கள்.
தற்போது சரிந்து வரும் பங்குச் சந்தைகள் மற்றும் உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இப்போதெல்லாம், தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழி முறைகள் உள்ளன. அந்த வகையில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான 4 முக்கிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
தங்கம் நகைகள்
பெரும்பாலான தங்கம் வாங்குவோர் இன்னும் உலோகத்தை தங்க நகைகளாக வாங்க விரும்புகிறார்கள். முக்கியமாக நகைகள் விலைமதிப்பற்ற தேர்வாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் அவை அதனுடன் செலவு மற்றும் மதிப்பு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில், தங்கத்தை நகைகளாக வாங்குவது முதலீடாக இல்லாமல், உணர்வுபூர்வமான மதிப்பாகவும் இருக்கிறது.
தங்க ஈடிஎஃப்கள் (கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் – Gold ETF)
கோல்ட் எக்ஸ்சேஞ் டிரேடட் ஃபண்ட் என்பது காகிதம் அல்லது டிமேட் வடிவத்தில் தங்கத்தை குறிக்கும் அலகுகள் ஆகும். பங்குகளைப் போலவே தங்க ஈடிஎஃப்களிலும் மக்கள் டிமேட் கணக்கு மூலம் வர்த்தகம் செய்யலாம். நீங்கள் 1 கிராம் தங்கத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் தங்க ஈடிஎஃப்கள்களில் முதலீடு செய்ய, உங்களிடம் வர்த்தகக் கணக்கு இருக்க வேண்டும்.
தங்க ஈடிஎஃப்களை பொறுத்தவரை, தங்க அலகுகள் டிமேட் வடிவத்தில் இருப்பதால் சேமிப்பு மற்றும் திருட்டு பற்றி முதலீட்டாளர் கவலைப்படத் தேவையில்லை. ஆபரணங்கள் வடிவில் உள்ள தங்கம் போன்றவற்றுக்குக் கட்டணம் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் இல்லாததால், கையகப்படுத்துவதற்கான குறைந்த செலவையும் கொண்டுள்ளது.
தங்கப் பத்திரங்கள் (SGB)
தங்கப் பத்திரங்கள் மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் அரசுப் பத்திரங்கள் ஆகும். அவை கிராம் தங்கத்தில் குறிக்கப்படுகின்றன மற்றும் அவை தங்கத்தின் மாற்றாகக் கருதப்படுகின்றன. தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் தங்கத்தை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கின்றன. மற்றும் அதன் மீது வட்டியை பெறவும் உதவுகின்றன
நீங்கள் தங்கப் பத்திரங்களை வாங்கும் போது அதற்கான வெளியீட்டு விலையை பணமாக செலுத்த வேண்டும். மேலும் தங்கத்தின் தற்போதைய சந்தை விகிதத்தின்படி மீட்டெடுப்பதற்கான கட்டணமும் பணமாக கொடுக்கப்பட வேண்டும்.
டிஜிட்டல் தங்கம்
டிஜிட்டல் தங்கம் என்பது உண்மையான உடைமை தேவையில்லாத விலைமதிப்பற்ற உலோகத்தில் (24 காரட்) முதலீடு செய்வதற்கான ஒரு மெய்நிகர் வழியாகும். நீங்கள் ஆன்லைன் பணம் அல்லது UPI மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம் மற்றும் விற்பனையாளர் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் இன்வாய்ஸை வழங்குவார். நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் நிறுவனம், தங்கத்தை அதன் பாதுகாப்பான பெட்டகத்தில் சேமிக்கிறது.
டிஜிட்டல் தங்க முதலீட்டை ரூபாய் 1 முதல் தொடங்கலாம். உங்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் தங்கத்தை விற்கலாம் அல்லது வாங்கலாம். மேலும் இது எந்தத் தொந்தரவும் இல்லாமல் உடனடி பணப்புழக்கத்தை வழங்குகிறது. இருப்பினும், பெரும்பாலான தளங்களில் டிஜிட்டல் தங்க முதலீடுகளுக்கு ரூ.2 லட்சம் வரம்பு உள்ளது.
source https://tamil.indianexpress.com/business/4-popular-modes-to-invest-in-gold-tamil-news-470549/