சனி, 11 ஜூன், 2022

அரசியலில் தலையிடக் கூடாது: ப.சிதம்பரம்

 

ஆதீனங்கள் அரசியலில் தலையிடக் கூடாது, அரசும் ஆன்மீகத்தில் தலையிடக் கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழக அரசியலில் கூடுதலாக கவனம் செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பு. பொருளாதார நிபுணர்கள் அறிஞர்களிடமிருந்து கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்றும் எச்சரித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும். தற்போது காங்கிரஸ் கட்சியில் 50 சதவீதம் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிடுவதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கும். முஸ்லிம்கள் உள்ள நாட்டில் முஸ்லிம்களுக்கு விரோதமாக அரசு பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். கச்சத் தீவுக்கும் இந்தியாவிற்கும் உடன்பாடு உள்ளது. அதை மறு பரிசீலனை செய்யாமல் பாஜக பேசுவது ஏற்புடையது அல்ல. உலகப் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பாதிப்பு இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கும். ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றார்.

-ம.பவித்ரா

source https://news7tamil.live/adheenam-should-not-interfere-in-politics-p-chidambaram.html