வியாழன், 2 மார்ச், 2023

சமையல் கேஸ் விலை அதிரடி உயர்வு: இன்று முதல் அமல்!

 1 3 23

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும், வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டை கருத்தில்கொண்டு, கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

மார்ச் மாதத்தில் இருந்து விலை உயர்வதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.50 உயர்ந்து ரூ.1118.50 க்கு விற்பனையாகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் , கேஸ் சிலிண்டர் விலை ரூ.1068.50 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது


source https://tamil.indianexpress.com/tamilnadu/lpg-gas-cylinder-price-hike-from-march-in-tamil-nadu-602465/

Related Posts: